அன்பைச் சொல்லும் குறும்படம்!

முப்பது நிமிடம் ஓடக்கூடிய "கிரேட் ஸ்டூடண்ட்ஸ் மேக்  கிரேட் டீச்சர்ஸ்' குறும்படத்திற்கு குழந்தைகளுக்கான படைப்பு பிரிவில் திரையரங்குகளில்  திரையிடுவதற்கு மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளது.
அன்பைச் சொல்லும் குறும்படம்!
Published on
Updated on
1 min read


முப்பது நிமிடம் ஓடக்கூடிய "கிரேட் ஸ்டூடண்ட்ஸ் மேக்  கிரேட் டீச்சர்ஸ்' குறும்படத்திற்கு குழந்தைகளுக்கான படைப்பு பிரிவில் திரையரங்குகளில்  திரையிடுவதற்கு மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இக்குறும்படம் ஆசிரியருக்கும் - மாணவனுக்கும் இடையே உள்ள ஆழமான அன்பை  வெளிப்படுத்தும் படம்.  முப்பது நிமிடமும் உரையாடல் ஏதும் இல்லாமல் மெüனப் படமாகவே ஓடுவதால் உலகம்  முழுவதும் உள்ள மக்கள் கண்டு களிக்கலாம். இனிமையான இசையும் மாணவர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களின் நடிப்பும் குறும்படத்தை உயிரோட்டமாக வைத்துள்ளது. 
ஆசிரியர் வீட்டில் உள்ள பிரச்னை,  பள்ளியில் சக ஆசிரியர்களின் எதிர் வினை, சமுதாயத்தின் எதிர்வினை, கடுமையான சட்டமும் காவல் துறையும், நீதிமன்றமும் என்று படம் விரிகின்றது.  

சிறந்த வகுப்பறை கற்றல் கற்பித்தில் முறைகளையும் அழகாக படம் பிடித்துள்ளனர். ஆசிரியர் மீது பரிசுத்தமான அன்பினை எவ்வாறு மாணவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள் அந்த ஆழமான அன்பு ஆசிரியரை சிக்கலிலிருந்து எவ்வாறு காப்பாற்றுகிறது என்பதே படம்.

இந்த குறும்படத்தை தயாரித்தவர் அவரது மனைவி இளம்பிறை ஸ்ரீராம். படத்தை இயக்கியவர் கோபி. நடித்தவர்கள் ஆசிரியராக சின்னசாமி. புதுச்சேரி முத்தரையர்பாளையம் பாரதிதாசன் மேனிலைப்பள்ளி மாணவர்கள் நடித்திருந்தார்கள். இசையமைத்தவர் காரை சரவணன். 

சிறந்த மாணவர்களால் ஆசிரியர் சிறந்த ஆசிரியராகிறார். இக்குறும்படம்   உண்மைக் கதையின் அடிப்படையிலானது. என்ன கதை?

இக்குறும்படத்துக்கு கதை எழுதியுள்ள புதுச்சேரி புராணசிங்குபாளையத்தைச் சேர்ந்த இயற்பியல்  விரிவுரையாளர் ஸ்ரீராம்.  புதுச்சேரி செல்லிப்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது வகுப்பறையில் "லிட்டில் அட்வென்ஜரன்ஸ்'  என்ற  ஆங்கிலப் பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் உள்ள சிறுவன் குப்புராமும் கடந்த 2 மாதத்துக்கு முன் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கில் சங்கராபரணி  ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட  வெள்ளப்பெருக்கில் 3 மாணவிகளை  காப்பாற்றியதாக கூற அதை வெளியுலகுக்கு இச்செய்தியை கொண்டு வந்தார் ஆசிரியர் ஸ்ரீராம்.  

இதனால் அந்த மாணவனுக்கு அன்றையப் பிரதமர் வாஜ்பாய் வீரதீரச் செயலுக்கான விருதை வழங்கினார். இவ்வாறு மாணவனுடன் உயர்ந்த உறவைப் பேணி வந்த ஸ்ரீராம்,  ஆசிரியர் - மாணவர் அன்பை விளக்கும்விதமாக இந்தக் குறும்படத்தை எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com