இந்தியாவில் முதல்முறையாக "கராத்தேவில் பிளாக் பெல்ட்' பெற்ற இரட்டையர்கள் என்ற சாதனையைச் செய்துள்ளனர் காரைக்காலைச் சேர்ந்த ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி.
அம்மா பிரியா சொல்கிறார்:
""என்னோட கணவருக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதனால, எங்க பசங்களுக்கும் ஏதாவது ஒரு விளையாட்டைக் கத்துக்கொடுக்க நினைச்சோம். எங்களுக்கு இரட்டைக் குழந்தைகள். ஒன்று ஆண் இன்னொன்று பெண். இருவருமே சின்ன வயசிலிருந்து துருதுருன்னு இருப்பாங்க. முதல்ல நீச்சல் பயிற்சியில் சேர்த்துவிட்டோம். அது அவங்களுக்கு பிடிக்கல. அதனால கராத்தே கிளாஸ்ல சேர்த்துவிட்டோம். 3 வயசுலிருந்தே கராத்தே கிளாசுக்குப் போறாங்க. கராத்தேவை நல்லா கத்துகிட்டு இன்னைக்கு இந்தியாவுல குறைந்த வயதில் பிளாக் பெல்ட் வாங்கிப் பெருமை சேர்த்திருக்காங்க. கராத்தேயுடன் ஸ்ரீவிசாகன் செஸ் கிளாசுக்கும் போறான். அதுபோல் ஸ்ரீஹரிணி நல்லா ஓவியம் வரைவாள். அத்துடன் கட்டுரை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்'' .
அப்பா முருகானந்தம் சொல்கிறார்:
""குழந்தைகளின் கராத்தே பயிற்சிக்கான பொறுப்பு என்னுடையது. அவர்களின் பள்ளிப் படிப்புக்கான பொறுப்பு என் மனைவியுடையதுன்னு பிரிச்சிக்கிட்டோம். தினமும் அதிகாலை 5.00 மணிக்கு எழுந்திருச்சி, 5.30 மணிக்கு கராத்தே கிளாஸூக்குப் போயிடுவாங்க. இரண்டு மணிநேரப் பயிற்சிக்குப்பின் வீடு திரும்பியவுடன் ஸ்கூலுக்குப் போறதுக்கான எல்லா ஏற்பாடும் செஞ்சி வெச்சுருப்போம். படிப்புடன், ஸ்கூலில் எந்தப் போட்டி நடந்தாலும் கலந்துகிட்டுப் பரிசு வாங்கிடுவாங்க. கராத்தே போட்டிக்கு வெளியூருக்குப் போகிறபோது வயசு மற்றும் எடைக்கு ஏற்ற மாதிரிதான் போட்டியாளர்களும் இருப்பாங்க. சில நேரத்துல இவங்களைவிட வயசுல பெரியவங்க போட்டியாளரா கலந்துக் கிட்டாலும் அசராமப் போட்டியிட்டு ஜெயிப்பாங்க.
இந்தப் புள்ளைங்க ரெண்டுபேரும் ஒலிம்பிக் போட்டியில கலந்துகிட்டு இந்தியாவுக்குத் தங்க மெடல் வாங்கித் தரணும் என்பதுதான் எங்களோட ஒரே லட்சியம்'' .
உங்களின் வருங்காலக் கனவுதான் என்ன சாதனை செய்த இரட்டையர்களிடம் கேட்டோம்.
""ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கணும், ஐ.ஏ.எஸ் படிச்சி கலெக்டராகணும்.'' என்றான் ஸ்ரீவிசாகன்.
""நானும் ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கணும், எங்கள் தாத்தா இதய நோயால திடீர்ன்னு செத்துட்டாங்க. அதனால டாக்டருக்குப் படிச்சி, இதயநோய் நிபுணர் ஆகி எல்லோரையும் காப்பாத்தணும்'' என்றார் ஸ்ரீஹரிணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


