விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிகள் குறித்து சமூக ஊடகங்களில் அவ்வப்போது செய்திகள் வெளிவருவது வழக்கம். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அளவு கடந்து நேசிப்பது, அனுஷ்காவை விராட் விட்டுக் கொடுக்காமல் பேசுவது, விராட் கோலி ஆடும் போட்டிகளை அனுஷ்கா நேரில் வந்து பார்த்து அவரை உற்சாகப்படுத்துவது என ஏகப்பட்ட தருணங்களைச் சொல்லலாம்.
மேலும் நடிகைகளில் அனுஷ்கா சர்மா வித்தியாசமானவர். யாரிடமும் சென்று எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் எனக் கேட்பதில்லை. ""நான் அழகாக இருப்பதாக நினைக்கிறேன். அதைப் பார்த்து அதுக்கு ஏற்ப எனக்கு வேடம் கொடுங்கள் போதும்'' என்கிறார். அந்தளவு தன்னம்பிக்கை பெண்மணி. அது மட்டுமல்ல விராட் கோலியின் வெற்றிக்குப் பின்னால் இருந்து செயல்படுபவர்.
விராட் கோலி தனது காதல் மனைவி அனுஷ்கா சர்மா குறித்து சமீபத்தில் மனம் திறந்தார்:
""என் வாழ்க்கையில் அனுஷ்காவிற்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. என்னுடைய வெற்றி - தோல்வி இரண்டிலும் அவர் என்னுடன் பங்கு கொள்வார். பல சர்ச்சைகள் இருந்தாலும் அரங்கத்திற்கு நேராக வந்து கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்ப்பது என எனக்காக அவர் செய்யும் செயல்கள் ஏராளம்.
என்னுடைய தீவிர ரசிகை போல் ஒவ்வொரு புகைப்படத்தையும் உடனே சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார். திருமணத்திற்குப் பிறகு முக்கியமான முடிவுகளை எடுக்க எனக்குப் பெரிதும் உதவுவார். வீட்டில் அவர் தான் என்னுடைய கேப்டன். ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல மனைவி கிடைத்து விட்டால் வேறு என்ன வேண்டும்? அனுஷ்கா தான் என்னுடைய பலம்''” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


