குலசேகரபட்டினம்

ஜேம்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "குலசேகரபட்டினம்'.  ஜேம்ஸ், ஸ்ரீதேவி,  ஜூனியர் ராஜேந்திரன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர்.
குலசேகரபட்டினம்
Updated on
1 min read

ஜேம்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "குலசேகரபட்டினம்'.  ஜேம்ஸ், ஸ்ரீதேவி,  ஜூனியர் ராஜேந்திரன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். பல இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஆள்வான் கதை எழுதி இயக்குகிறார். 

படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""மனித உறவுகள் முதன்மையானது. உறவுகள்தான் மனித வாழ்வின் ஆதாரம். அதை விட்டு வெளியேற நினைக்கிற மனப்பாங்கு இப்போது பரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... 

இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள். ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு போகக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. அண்ணன் - தம்பி பாச, நேசத்தோடு காதலையும் சேர்த்து சுவாரஸ்யம் கூட்டுகிற கதை. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன'' என்றார் இயக்குநர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com