அக்கம்பக்கம்

தற்போது கொல்கத்தா என்றழைக்கப்படும் இந்த நகரம் முன்பு கல்கத்தா என்று இருந்தது.
அக்கம்பக்கம்
Updated on
1 min read


கொல்கத்தா

தற்போது கொல்கத்தா என்றழைக்கப்படும் இந்த நகரம் முன்பு கல்கத்தா என்று இருந்தது.
இந்தியாவின் முதல் செய்தி நிறுவனம் கொல்கத்தாவில்தான் தொடங்கப்பட்டு, முதல் செய்தித்தாள் வெளியானதும் கொல்கத்தாவில்தான்.
கொல்கத்தாவில்தான் இந்தியாவின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
ஹூக்ளி நதியின் மீது ஹெளரா - கொல்கத்தா நகரங்களை இணைக்கக் கட்டப்பட்டுள்ள ஹெளரா பாலம் மிகப் பழமையானது. 1943-இல் இது திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் தபால் நிலைய அலுவலகமும் கொல்கத்தாவில்தான் உள்ளது.
பிர்லா கோயில், ஜெயின் கோயில் ஆகியவை கொல்கத்தாவில் சிறப்பு வாய்ந்த இடங்களாகும்.
அரண்மனைகளின் நகரம் என அழைக்கப்படும் நகரம் கொல்கத்தா.
இந்தியாவின் பெரிய விளையாட்டு மைதானமான ஈடன் கார்டன் அமைந்துள்ள நகரம்.
பிரபலமான எழுத்தாளர் கட்டடம் அமைந்துள்ளது கொல்கத்தாவில்தான்.


நிறைவேறிய கோரிக்கை! 

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்த நாகரீகங்களில் முக்கியமானது பாபிலோனிய நாகரீகம் ஆகும். வளமான பிரதேசத்தில் தோன்றிய இந்த நாகரீகம் பல ஆண்டுகாலம் வரை நீடித்தது. 
மக்களின் சமூக நிலை, கட்டடக்கலை, வானியல் அறிவு மற்றும் நீதி நிர்வாகம் போன்ற துறைகளில் அரசர்கள் தேர்ந்த ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த நாகரீகத்தின் மையமான  இது தற்போது சிதைந்திருக்கிறது. இத்தனைக்கும் ஏழு உலக அதிசயத்தில் இதுவும் ஒன்றாக இருந்தது. 
சொல்லப்போனால் உலக வரலாற்றில் அந்நகரத்தின் புகழ் வீழ்ச்சியடைந்தது இப்போதைய காலம் தான். அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, ஈராக்கை ஆண்ட சதாம் உசைனின் மாளிகைக் கனவு. தற்போது பாபிலோனா இருக்கும் இடத்தில் மிகப்பெரிய மாளிகை ஒன்று கட்ட முன்னாள் அதிபர் சதாம் முயற்சித்தார். இதனால் பழமையான பல பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டன.
இரண்டாவது அமெரிக்கா. வளைகுடா யுத்தத்திற்கு பிறகு அமெரிக்கா - ஈராக் சச்சரவு உச்சகட்டத்தை எட்டியது. 2003 -இல் அமெரிக்க படையெடுப்பின் போது பாபிலோனாவின் ராணுவ முகாமாக செயல்பட்டது. இதனை உலகில் உள்ள பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் அப்போதே எதிர்த்தனர். ஆனாலும் புஷ் எதையும் கண்டுகொள்ளவில்லை. இத்தனை வரலாற்று சிறப்புமிக்க நகரத்திற்கு உலகின் புராதன நினைவுச்சின்னங்களுக்கு கொடுக்கப்படும் யுனெஸ்கோ விருதை வாங்கிக்கொடுத்துவிட 1980-ஆம் ஆண்டுகளில் இருந்து முயன்று வந்தது. அவர்களுடைய குரலுக்கு தற்போதுதான் செவிமடுத்திருக்கிறது ஐ.நா.
சமீபத்தில் அசர்பைஜானில் நடந்த ஐ.நாவின் சிறப்பு கூட்டத்தில் புதிய சில நகரங்கள் உலகின் புராதன சின்னங்களின் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டன. மேலும் இக்கூட்டத்தில் தற்போதைய பாபிலோனின் நிலை மிக மோசமாக இருக்கிறது. உடனடி புனரமைப்பு வேலைகளில் ஈடுபடவும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன. அதில் பாபிலோனும் ஒன்று. இதன்மூலம் இராக்கின் 36 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com