மன அமைதி தான் முக்கியம்: காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் கரோனா குறித்து அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது.. ""நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
மன அமைதி தான் முக்கியம்: காஜல் அகர்வால்
Published on
Updated on
1 min read



தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் கரோனா குறித்து அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது.. ""நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் கடைசியாக மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையானது மன அமைதி மட்டும்தான். அது இருந்தால் வேறு எதுவும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை என்று இந்த கரோனா காலத்தில் எல்லோருக்கும் புரிந்து இருக்கும். எனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களை பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு மன அமைதியை தவிர முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்துள்ளது. எந்த மாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருக்கத்தான் நான் விரும்புகிறேன். 

எவ்வளவு பணம் இருந்தாலும் அமைதி இல்லாமல் போனால் என்ன பயன்? இப்போது கரோனாவால் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்து இருக்கும்'' என்று 
கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com