
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் "கோப்ரா' படத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்தப் படம் மே மாத வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு, ரஷ்யாவில் க்ளைமேக்ஸ் காட்சிகளைப் படமாக்கியபோதுதான், கரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
"கோப்ரா' படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாருக்கே தனது 60-ஆவது படத்தையும் தயாரிக்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார், விக்ரம். இந்தப் படத்தை இயக்க தேர்வாகியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ்.இந்தப் படத்தில் ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கை, சிறு வயதில் இருந்து ஆரம்பித்து அவன் எப்படி "டான்' ஆகிறான் என்பது வரைக்கும் இருக்குமாம். மதுரையை களமாகக் கொண்ட இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், விக்ரமின் இளவயது தோற்றத்தில் அவரின் மகன் துருவ் விக்ரமே நடிக்க விருக்கிறாராம். படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்தப் பொது முடக்கம் முடிந்ததும், உடனடியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். "பொன்னியின் செல்வன்' படத்தை தொடங்க கால தாமதம் ஏற்படும் என்பதால், உடனடியாக இந்தப் படத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.