மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

63 ஆண்டுகளைக் கடந்த பொக்கிஷம்!

நாம் யதார்த்தமாகத் தொலைத்த பொருட்கள் மீண்டும் கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் அதில்  நாம் பாதுகாத்து வைத்த விஷயங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

News image
Updated On :15 மார்ச் 2020, 2:43 pm

நாம் யதார்த்தமாகத் தொலைத்த பொருட்கள் மீண்டும் கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் அதில்  நாம் பாதுகாத்து வைத்த விஷயங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் அமெரிக்காவில் 1957-ஆம் ஆண்டு தொலைந்துபோன பள்ளி மாணவி ஒருவரின் பர்ஸ் கிட்டத்தட்ட அரை நூற்றண்டுகளுக்குப் பின் மீண்டும் கிடைத்துள்ளது. அதில் இருந்த எல்லாப் பொருட்களும்  அப்படியே இருந்தது தான் ஆச்சரியம். 

பட்டி ரம்ஃபோலா என்ற மாணவி அமெரிக்காவில் ஓஹியா மாகாணத்தில் உள்ள ஹூவர் மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது தன்னுடைய பர்ûஸ தவற விட்டுவிட்டார். அதில் தன்னுடைய குடும்பப் புகைப்படம், தன்னுடைய நண்பர்கள் புகைப்படம், செல்லப்பிராணியின் படம்,  மேக் அப் சாதனங்கள், , சீப்பு, பென்சில்கள், ஸ்கேல், 26 சென்ட் காசுகள்,  கால்பந்தாட்ட அட்டவணை, பிரிக்கப்படாத சூயிங்கம், உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தன. எங்கே தவறவிட்டோம் என்று தெரியாமல் அவர் பல இடங்களில் தேடியும்  பர்ûஸக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பர்ஸ் யார் கையில் சிக்கியதோ தெரியவில்லை. இனியும் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து அதையும் மறந்துவிட்டார் ரம்ஃபோலா.

ஹூவர் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சென்ற ஆண்டு பள்ளி பராமரிப்புப் பணியைத் தொடங்கியது. அப்போது மாணவர்களின் லாக்கர் அருகே சுவரோடு உள்ளே இருந்த பிங்க் நிற பர்ûஸ கண்டுபிடித்தது. உடனே பர்ஸ் குறித்த  தகவலை  முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது பள்ளி நிர்வாகம்.   சமூக வலைதளங்கள் மூலமாக அந்த பர்ஸ் குறித்த தகவல்களும் பரவின. 

அப்போது தான்  அந்த பர்ஸ்  1960 -ஆம் ஆண்டு பள்ளியில் படிப்பை முடித்த பட்டி ரம்போலா என்பவருடையது எனத் தெரியவந்தது.  அப்போதுதான் அந்த சோகமான நிகழ்வு தெரியவந்தது.  ரம்ஃபோலா இப்போது உயிரோடு இல்லை.   2013 -ஆம் ஆண்டு தனது 72-வது வயதில் மரணம் அடைந்து விட்டார் என்பதைக் கண்டு பிடித்தனர். 

ரம்ஃபோலாவுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள்.  கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ரம்ஃபோலாவின் பர்ஸ் அவருடைய பிள்ளைகளுக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்தது போல் இருந்தது. அதில் இருந்த புகைப்படங்களைப் பார்த்து ரசித்தனர்.  அதிலிருந்த சில  காசுகளை தங்களது அம்மாவின்  நினைவாக ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டனர்.

இந்த பர்ஸ் தொலைந்த ஆண்டு  தான் ரஷியா தனது  "ஸ்புட்னிக் 1'  விண்ணில் செலுத்தியது. அக்டோபர் 4, 1957 அன்று ஏவிய ஸ்புட்னிக் 1 தான் உலகின் முதல் செயற்கைக்கோளாகும்.  ரம்ஃபோலா பர்ûஸ தொலைத்த விஷயமும் அதை தேடிக்கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்ற விவரமும், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அடைந்த நெகிழ்ச்சி பற்றியும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது படிப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதெல்லாம் சாத்தியம் தானா  என்று...  ஆனால், உலகம் ஒரு வட்டம் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.