""சென்னை வியாசர்பாடி என்றாலே சமூக விரோதிகள் அதிகம் இருக்கும் பகுதி என்று கூறுவார்கள்.ஆனால் அது உண்மையில்லை. இங்கு எத்தனையோ திறமை வாய்ந்த இளைஞர்கள் வெளியே தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம்'' என்கிறார் லோகசந்திரன். இவர் குத்துச்சண்டை பயிற்சியாளர்.
வியாசர்படி சர்மா நகர் மாநகராட்சி மைதானத்தில் காலை, மாலை என இரு வேளைகளிலும் அந்தப்பகுதியைச் சேர்ந்த 48 மாணவர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற விஸ்வநாத் என்ற மாணவர் துபாயில் நடந்த ஏசியன் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்று திரும்பியுள்ளார். மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த பயிற்சியாளர் லோகசந்திரனிடம் பேசினோம்:
நான் பல ஆண்டுகளாக குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறேன். தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்திலும் நடுவராக உள்ளேன். வியாசர்பாடி பகுதியிலுள்ள பின் தங்கிய பகுதியிலுள்ள வசதியில்லாத மாணவர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளிக்கும் நோக்கில் அமைப்பட்டது தான் "கிங் மேக்கர் பாக்ஸிங் அகாதெமி'.
சர்மா நகரிலுள்ள மாநகராட்சி மைதானத்தில் காலையில் இரண்டு மணி நேரமும், மாலையில் இரண்டு மணி நேரமும் பயிற்சி நடைபெறும். கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்குப் பயிற்சியை இலவசமாகவே வழங்குகிறோம்.
பி.காம் பட்டதாரியான எனக்கு சரியான வேலை அமையவில்லை. இந்தப் பகுதியில் பால் சப்ளை செய்யும் வேலையைச் செய்து வருகிறேன். என்னுடன் மற்றொரு பயிற்சியாளரும் பணியாற்றுகிறார். அவர் பெயர் சையது நசீத். நாங்கள் இருவரும் நண்பர்கள்.
குத்துச்சண்டையைப் பொருத்தவரை பொதுவாகவே இது ரவுடிகள் விளையாடும் விளையாட்டு என்ற பரவலான கருத்து உள்ளது. உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ளகூடிய யோகா, ரன்னிங், நீச்சல் பயிற்சி உதவுகிறது. ஆனால் தவறான பழக்கத்தில் செல்பவர்களை மாற்றும் எண்ணம் கொண்டது தான் குத்துச்சண்டை. சரியான உணவு முறையும், பழக்க வழக்கங்களை மாற்றினால் யாரும் இந்த குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றியடையலாம்.
நீயா - நானா என்ற கான்செப்ட் மூலம் உண்மை திறன் வெளியே வரும். குறிப்பாகப் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விளையாட்டு இந்த குத்துச்சண்டை. குத்துச்சண்டையில் சிறந்த முறையில் பயிற்சி பெற்ற பெண்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை அடிக்க முடியும். மன தைரியத்தை ஏற்படுத்தும். எந்தப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளத் தைரியத்தை உண்டாக்கும் தன்மை கொண்டது. நல்ல உடலைமைப்பு, எதிர்மறை சிந்தனை இல்லாத நல்ல எண்ணம் கொண்ட மனம், சிறந்த படிப்பு, நல்ல வேலையை ஏற்படுத்துவதில் குத்துச்சண்டை முக்கியப் பங்கு வகிக்கிறது.
குத்துச்சண்டை பயிற்சியாளர்களைப் பொருத்தவரை பயிற்சி பெற வந்திருக்கும் மாணவர்களின் திறமைகளைக் கவனித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களிடமிருந்து பொருளாதார ரீதியாக எப்படி பயனடையலாம் என்ற யோசிக்கக் கூடாது. குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றால் "ஆர்மி ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்'டில் சேரலாம். விளையாட்டு கோட்டாவில் அரசுப் பணிக்கும் சேரலாம். இப்படி பல வாய்ப்புகள் உள்ளன என்பது பலருக்கு தெரிவதில்லை.
வியாசர்பாடியை போன்ற பகுதியில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றே நோக்கம் கொண்ட இளைஞர்கள் அதிகம். ஆனால் அவர்களுக்கு சரியான பாதை காட்டுவதற்கு யாரும் இல்லை. விளையாட்டை ஊக்குவிக்கும் பயிற்சியாளர்கள் இல்லை. எங்களிடம் பயிற்சி பெறும் வசதியில்லாத மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை நாங்களே வழங்குகிறோம். சில மாதங்களுக்கு முன் இங்கு பயிற்சி பெறும் மாணவரின் தந்தை இறந்துவிட்டார். அந்த மாணவர் பள்ளிக்குச் செல்லாத நிலை ஏற்பட்டது. அந்த மாணவரின் எதிர்காலம் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக அந்த மாணவரை எங்களது குறைந்த வருமானத்தில் படிக்க வைக்கிறோம். எங்கள் சேவை மனப்பான்மைக்கு கோவையை சேர்ந்த பிரசாந்த் என்பவர் முடிந்த வரை உதவிகள் செய்வார்'' என்கிறார் லோகசந்திரன்.
தங்கப் பதக்கம் பெற்று திரும்பியிருக்கும் விஸ்வநாத்திடம் பேசிய போது சொன்னார்:
""எல்லா வீரர்களும் எல்லா விளையாட்டுகளையும் விளையாட முடியும். ஆனால் குத்துச்சண்டை விளையாட்டை விளையாட முடியாது. இந்த விளையாட்டு எனக்கு ஆரம்பக் காலத்தில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாது. தன்னம்பிக்கையும், எதையும் எதிர்கொள்ளும் மனப்பான்மையையும் ஊக்கப்படுத்திக் கொண்டேன். தினந்தோறும் 6 மணி நேரம் பயிற்சி செய்கிறேன். வரும் 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அதற்கு என்னுடைய அகாதெமி பயிற்சியாளர்கள் லோகசந்திரன், சையது நசீத் உறுதுணையாக இருக்கிறார்கள்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


