வயது 14 பேசுவது 40 மொழிகள்

தாய் மொழியில் பேச, எழுத , தட்டச்சு செய்ய திணறுபவர்கள் இருக்க நாற்பது மொழிகளில் பேசுவதுடன் நானூறு மொழிகளில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர் ஒருவர் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இருக்கிறார் என்றால் அதிசயம
வயது 14 பேசுவது 40 மொழிகள்
Updated on
2 min read


தாய் மொழியில் பேச, எழுத , தட்டச்சு செய்ய திணறுபவர்கள் இருக்க நாற்பது மொழிகளில் பேசுவதுடன் நானூறு மொழிகளில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர் ஒருவர் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இருக்கிறார் என்றால் அதிசயம் தானே..? அந்த ஒருவர் பதினான்கு வயதான மாணவர்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அருகில் அபிராமம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட மஹ்மூத் அக்ரம், தற்போது சென்னை புழல் பகுதியில் வசித்து வருகிறார். அப்துல் ஹமீது தந்தை. ஆமினாள் பேகம் தாயார். பதினான்கு வயதாகும் மஹ்மூத் அக்ரமிற்கு ஒரு தங்கையும், ஒரு தம்பியும் இருக்கிறார்கள்.

அக்ரமிற்கு மொழிகள் என்றாலே உயிர் மூச்சு. பல மொழிகளை நான்கு வயது முதல் கற்கத் தொடங்கிய அக்ரமிற்கு சுமார் நாற்பது மொழிகளில் பேசவும் தெரியும்.

இனி அக்ரம் பேசுகிறார்:

""மொழித் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்காக இஸ்ரேல் நாட்டு ஆன்லைன் பள்ளியில் உலக மொழிகளைக் கற்று வருகிறேன். "ஹீப்ரு' மொழி எனக்குத் தெரியும் என்பதினால் எனக்கு ஆன்லைன் வகுப்பில் சேர விசேஷ அனுமதி தந்தார்கள். இந்த வகுப்பினால் உலக மொழிகளில் உச்சரிப்பை சரி வரப் பேச்சில் கொண்டு வர முடியும். எனது மொழித் திறமைக்காக சுமார் 60 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு சர்வதேச விருதுகளும் அடங்கும்.

கம்ப்யூட்டர் கீ போர்டில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு மொழியின் கீ போர்டு எழுத்து மாறுபடும். இப்படி ஒவ்வொரு மொழிக்கும், அதனுடைய எழுத்து மாறுபடும். இதில் குழப்பம் இல்லாமல் மிக தெளிவாக அதற்குரிய "கீ' (ந்ங்ஹ்)யை அழுத்த வேண்டும் . அதுவும் வேகமாக அழுத்தத் தெரிந்திருக்க வேண்டும். உலக மொழிகளை கம்ப்யூட்டரில் "யுனிக்கோட்' முறையில் வேகமாக தட்டச்சு செய்கிறேன்.

நானே புதிய மொழி ஒன்றை உருவாக்கியுள்ளேன். புதிய மொழியின் எழுத்துக்களை அனைவரும் எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைத்திருக்கிறேன். அந்த புதிய மொழியின் எழுத்துக்களை டைப்பிங் செய்ய ஏதுவாக, எழுத்துக்களை வடிவமைத்துள்ளேன். அந்த புதிய எழுத்திற்கு "அத்தா ஸ்கிரிப்ட்' என்றும் பெயர் சூட்டியுள்ளேன்.

எனது அறிவாற்றலின் ஐ.க்யூவின் அளவு 162 என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஐ.க்யூ140 -க்கு மேல் இருந்தாலே அதி புத்திசாலி எனக் கருதப்படுவார்கள். எனது மூளைத் திறமைக்காக தெற்கு ஆப்ரிக்கா எனக்குக் குடியுரிமை வழங்கி, அந்நாட்டில் சாதனைகள் புரிய அழைப்பு விடுத்தது. நான் கற்ற மொழிகள் அனைத்தும் எனது தாய்மொழியான தமிழ் மூலமாகதான் கற்றுக் கொண்டேன். செளராஷ்டிர மொழி பேசும் மக்கள் அவர்களுடைய எழுத்துருவை மறக்காமல் இருப்பதற்கும், எளிதாக அம்மொழியின் எழுத்துக்களைக் கற்றுக் கொள்வதற்காகவும் "அனிமேஷன்' விளக்கப் படத்தை உருவாக்கியுள்ளேன்.

அப்பா பன்மொழி ஆசிரியர். உளவியல் ஆலோசகராகவும் மற்றும் கல்வி ஆராய்ச்சியாளராகவும் இருந்து வருகிறார். அவர்தான் மொழிகள் மீது ஆர்வத்தை என்னுள் விதைத்தவர். சென்னையில் உலக மொழிப் பயிற்சி நிலையத்தை நடத்தி வருகிறார்.

நானூறு மொழிகளில் மூன்று லட்சம் எழுத்துக்கள் எனது மூளையில் பதிந்துள்ளன. இந்த நினைவு திறனால், நான்கு நாட்களில் ஒரு மொழியை என்னால் கற்றுக் கொள்ள முடியும். ஸ்பானிஷ், பிரெஞ்சு, தமிழ், அரபிக், ஜப்பானிய மொழிகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. தமிழில் "முடி' என்பது' ஸ்பானிஷில் "முடிசு' என்று சொல்வார்கள் எழுபத்தைந்து நிமிடங்களில் 20 மொழிகளில் இந்திய தேசிய கீதத்தை எழுதியதற்காக ஐய்க்ண்ஹய் அஸ்ரீட்ண்ங்ஸ்ங்ழ் ஆர்ர்ந் ர்ச் தங்ஸ்ரீர்ழ்க்ள் விருது கிடைத்துள்ளது. நானூறு மொழிகளில் எனது திறமையைப் பரிசோதித்து முடிவு சொல்லக்கூடிய மொழி வல்லுநர்கள் கிடைக்காமல் இருப்பதால் கின்னஸ் சாதனைத் தள்ளிப் போய் கொண்டே இருக்கிறது!

நம்ஹப்ப் ஸ்ள் ஆண்ஞ் ற்ட்ங் ன்ய்க்ஷங்ப்ண்ங்ஸ்ஹக்ஷப்ங் க்ன்ங்ப் என்ற ஜெர்மானிய நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றது. இது வருடத்தில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள திறமையான குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்த கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் அழைப்பின் பேரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கலந்து கொண்டேன். 37 பேர்கள் என்னுடன் போட்டி போட தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்தியனான எனக்கு இவ்வளவு மொழிகள் தெரியும் என்பது சாத்தியமா? என்ற சந்தேகம் ஜெர்மனி டிவி நிகழ்ச்சி பொறுப்பாளர்களுக்கு ஏற்பட்டது. என்னைப் பரிசோதிப்பதற்காக ஐந்து பேர் அடங்கிய குழு சென்னை வந்தது. எனது மொழித் திறமையைப் பார்த்து, திருப்தி வந்ததும்தான் அழைப்பை உறுதி செய்தார்கள்.

ஜெர்மன் மொழியிலிருந்து அவர்கள் சொல்லும் மொழிக்கு நான் மொழிபெயர்த்து அந்த மொழியில் வேகமாகத் தட்டச்சுச் செய்ய வேண்டும். இதுதான் போட்டி. மொழி பெயர்ப்பிற்காக மூன்று நிமிடங்கள் கால அவகாசம் தந்தார்கள்.

பல்வேறு மொழிகளில் எத்தனை வார்த்தைகளை மொழிப்பெயர்த்து தட்டச்சு சரியாக செய்கிறேனோ அதற்கேற்றவாறு மதிப்பெண்கள் தருவார்கள். போட்டியில் எனக்கு கொடுக்கப்பட்ட 3 நிமிடத்தில் 24 மொழிகளில் மொழி பெயர்த்து, அதைத் தட்டச்சுச் செய்து காண்பித்து வெற்றிப் பெற்றேன். அந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் ஒளிபரப்பானது..'' என்கிறார் அக்ரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com