

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு 284 உறுப்பினர்களும் கையெழுத்திட்டனர். அப்போது மழை பெய்தது. ஒரு புதிய திட்டத்தை கொண்டு வரும் போது, மழை பெய்வது நல்லது என பல உறுப்பினர்கள் கூறினர்.
பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சோவியத் யூனியன், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் அரசியல் அமைப்புகளில் சிறப்பு அம்சங்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வார்த்தைகள் பிரெஞ்ச் புரட்சியின் போது பயன்படுத்தப்பட்டது.
நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ள (ஜ்ங் ற்ட்ங் ல்ங்ர்ல்ப்ங்) நாமாகிய மக்கள் அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டத்தின் முதல் வரி.
"பார்லிமெண்டரி டெமாக்ரசி' என்ற வார்த்தை பிரிட்டிஷ் பார்லிமெண்ட் இடமிருந்து பெறப்பட்டது. ஆனால் பிரிட்டனில், ராணி தான் தலைமை. இந்தியாவில் ஜனாதிபதிதான் தலைவர். இவர் இந்தியா முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.