அனுக்கிரகன்

சக்தி சினி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "அனுக்கிரகன்'.
அனுக்கிரகன்
Updated on
1 min read


சக்தி சினி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "அனுக்கிரகன்'.  டாக்டர். முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் முரளி ராதாகிருஷ்ணன், அஜய் கிருஷ்ணா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், தீபா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் சுந்தர் கிரிஷ். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""மிராஜ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில்  இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஸ்டோரி போர்டு உருவாக்குதல் போன்றவற்றை முறையாக கற்று சினிமாவுக்கு வந்திருக்கிறேன். "அனுக்கிரகன்' என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் இது. அப்பாவுக்கும் மகனுக்குமான உறவுப் பின்னல்கள்தான் படத்தின் திரைக்கதை. அப்பா-மகன் உறவு இருக்கே... அதில்தான் எத்தனை அழகு. 

எத்தனை அர்த்தம். ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்கும் உருவம் கொடுக்கிற உறவு அது. இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு பிரிட்டிஷ்காரன் எப்போதோ போய் விட்டான். ஆனால், பல குடும்பங்களில் அப்பாவுக்கும் மகனுக்கும் நடுவில் இன்னும் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டேதான் இருக்கிறது.  "இரண்டு வயசில உன் விரலைப் பிடிச்சுக்கிட்டு நடந்தது தப்புதான். அதுக்காக இருபது வயசுலயும் நீ என் கையை விட்டு விடுப்பா' என்று கேட்கிற மகன்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இப்படி நிறைய கேள்விகள் பசங்களிடம் இருக்கிறது.  தலைமுறைகள் இடைவெளி இப்போது அதிகமாகி விட்டது. அப்பாவை வில்லனாகப் பார்க்கிறார்கள்... இல்லா விட்டால் காமெடியன் ஆக்கி விடுகிறார்கள். என்னதான் அப்பாவோடு மோதினாலும், பாசம்னு வந்துட்டா நம்ம பசங்க எப்போதுமே தங்கம். இப்படி ஒரு சூழலைத்தான் இந்தப் படம் கடந்து போகும்'' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com