டெக்ஸ்வேலி

தென்னிந்தியாவின் ஜவுளி வர்த்தகத்திற்கு இதயமாக விளங்கும் ஈரோட்டில் நூல், காடா துணிகள், வீட்டு உபயோக ஜவுளிகள், துண்டுகள், லுங்கி, வேட்டிகள், ஆண், பெண் குழந்தைகளின் ஆயத்த ஆடைகள், உள்ளாடைகள் என 10-க்கும்
டெக்ஸ்வேலி
Published on
Updated on
1 min read


தென்னிந்தியாவின் ஜவுளி வர்த்தகத்திற்கு இதயமாக விளங்கும் ஈரோட்டில் நூல், காடா துணிகள், வீட்டு உபயோக ஜவுளிகள், துண்டுகள், லுங்கி, வேட்டிகள், ஆண்,
பெண் குழந்தைகளின் ஆயத்த ஆடைகள், உள்ளாடைகள் என 10-க்கும் மேற்பட்ட ஜவுளிப் பொருள்கள் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடக்கும் வகையில் அனைத்தும் ஒரே இடத்தில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் 16 லட்சம் சதுர அடியில் "டெக்ஸ் வேலி' அமைந்துள்ளது.

குறு,சிறு, நடுத்தர ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் பொருள்களை நியாயமான விலைக்கு விற்க, புதிய சந்தை யுக்திகளை வாய்ப்புகளை அறிய டெக்ஸ்வேலி மிகப்பெரிய அரிய வாய்ப்பாக தமிழகத்திற்கு அமைந்துள்ளது.

சாலையோரங்களில் வெயிலிலும் மழையிலும் வியாபாரம் செய்வதைத் தவிர்க்க உலகத் தரத்தில் 4 லட்சம் சதுர அடியில் ஒரு வாரச் சந்தை தயாராகி உள்ளது.

வாங்குவோர்-விற்போர் சந்திப்பு, உலக அளவில் ஆடை உலகில் புதிய வடிவமைப்புகள், காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை அறிதல் என ஜவுளித் தொழிலில் உள்ள அனைவருக்கும் கண்காட்சி அரங்கம் 85 ஆயிரம் சதுர அடியில் வாரச் சந்தை வளாகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ளது.

வங்கிகள், போக்குவரத்து வசதி, சரக்கு ஊர்திகள், குடோன்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து உள்ள டெக்ஸ்வேலி ஆசியாவில் ஜவுளித்துறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com