வெட்டி பசங்க

வெட்டி பசங்க

ரேகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வெட்டி பசங்க'. வித்யூத் விஜய்,  அப்புக்குட்டி,  கெüஷிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபல நடன இயக்குநர் மஸ்தான் கதை எழுதி இயக்குகிறார்.
Published on


ரேகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வெட்டி பசங்க'. வித்யூத் விஜய்,  அப்புக்குட்டி,  கெüஷிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபல நடன இயக்குநர் மஸ்தான் கதை எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் மஸ்தான் பேசும் போது... "" எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி  ஒரு படம் இயக்க நினைத்து எழுதியதுதான் இது. இங்கே எல்லோருக்கும் பணம் மீது அத்தனை வெறி. பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள்தான் ஏராளம்.  எதற்காக இவ்வளவு வெறி, வேட்கை... என கேள்வி கேட்க முடியாது. பணம், மக்கள் மத்தியில் ஒரு நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறது.

அன்பாக வாழ்வதை விட இங்கே பணக்காரனாக வாழத்தான் எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையைத்தான் போலியான நபர்கள் சுலபமாக அறுவடை செய்து விடுகிறார்கள். இங்கே அப்படி எதுவும் இல்லாமல், எதையும் குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல், வெட்டியாக ஊர் சுற்றும் சிலர் செய்யும் செயல்கள் அந்த கிராம மக்களைப் பாதிக்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் அந்த செயல் அந்த ஊரையே திரும்பிப் பார்க்க வைக்கிறது. அந்தக் கிராமத்துக்கு நற்பெயரை பெற்றுத் தருகிறது. அது என்ன....? எப்படி...? என்பதுதான் திரைக்கதை. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன'' என்றார் மஸ்தான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com