கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ரோஜா மலரே!- 81: முதுமையிலும் இளமையான இசை! - குமாரி சச்சு

என் கையில் இருந்த தொலைபேசியை யாரோ பிடுங்கி பேச முற்பட்டார்கள். யாரென்று திரும்பிப் பார்த்தேன்.

News image
Updated On :21 மார்ச் 2021, 12:30 am

சலன்

என் கையில் இருந்த தொலைபேசியை யாரோ பிடுங்கி பேச முற்பட்டார்கள். யாரென்று திரும்பிப் பார்த்தேன். அது நாகேஷ். எதிர் முனையில் நான் பேசிக் கொண்டு இருந்தது என் அம்மா என்று தெரிந்து தான் என் கையில் இருந்த தொலைபேசியைப் பிடுங்கிப் பேசினார். அவர் பேசியது இரண்டு வரி தான். "நீங்கள் உங்கள் பெண்ணுக்குக் கொடுத்து அனுப்பும் சாப்பாட்டை, கொஞ்சம் அதிகம் சேர்த்து அனுப்புங்கள். நாங்கள் எல்லோரும் இருக்கோம், நானும் உங்கள் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டும்', என்றார். எப்பவுமே எனக்கு வீட்டில் இருந்து தான் சாப்பாடு வரும். காரணம், நான் சுத்த சைவம். அது மட்டுமல்லாமல் என் வீட்டில்,  பாட்டி அல்லது அம்மா தான் சமைப்பார்கள், சுவையுடன் இருக்கும். இந்த சுவை பல கலைஞர்களுக்குப் பிடிக்கும். அதனால் என் வீட்டில் இருந்து சாப்பாடு வருகிறது என்றதும், செட்டில் இருக்கும் பல கலைஞர்கள் மதிய இடைவேளையின் போது என்னுடைய அறைக்கு வந்து விடுவார்கள். 

தொலைபேசியில் அம்மாவிடம் பேசி முடித்தவுடன் நாகேஷிடம் கேட்டேன் "நானோ சுத்த சைவம். நீங்கள் அசைவம் சாப்பிடுபவர். எங்கள் வீட்டு சாப்பாடு உங்களுக்கு  ஒத்து வருமா?' என்றேன். உடனே அவர்  "யார் சொன்னார்கள், நான் சுத்த சைவம்'  என்று நாகேஷ் சொல்ல, என் பாட்டியும் "சரி, அவருக்கும் சேர்த்து சாப்பாடு அனுப்புகிறேன்', என்றார். அன்று பார்த்து எனக்குத் தான் படப்பிடிப்பில் கடைசி ஷாட். எல்லோரும் உணவு இடைவேளைக்குச் சென்று விட்டார்கள். 

எனது அறைக்கு நான் சென்று பார்த்தபோது, சாப்பாடு  வரவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பசி வேறு. திரும்பவும் என் அறையில் ஏதாவது சாப்பாடு கேரியர்  இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். ஒன்றுமே இல்லை என்று உறுதியாகத் தெரிந்து கொண்டு பிறகு, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன். அப்புறம் தான், நாகேஷ் என் அம்மாவிடம் சாப்பாடு கேட்டது எனக்கு நினைக்கு வந்தது. எனக்கு அடுத்த அறையில் இருந்த, நாகேஷை சென்று பார்த்தேன். அங்கு அவர், என் வீட்டில் இருந்து வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுக்  கொண்டு இருந்தார். அந்த அறையில் இரண்டு சாப்பாடு கேரியர் இருந்தது. அவரிடம், "ஒன்று தான் உங்களுக்கு, ஒன்று எனக்கு', என்று சொல்லிவிட்டு, எனது கேரியரை எடுத்து வந்து மதிய உணவை முடித்தேன். 

நாங்கள் இருவரும் சேர்ந்து பல விழாக்களுக்குச் சென்று இருக்கிறோம். அப்படிப் போகும் போது உருவானது தான், "கலாட்டா கல்யாணம்' என்ற திரைப்
படம். அப்பொழுது நாங்கள் இருவரும், படத்தில் ஆடிய நடனத்தை  ஆட வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். எங்களுடன் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் குழுவினர் வாத்தியங்களை வாசிக்க வந்திருந்தனர். அது மட்டுமல்ல;  பாடகர்கள் பி. சுசீலா, டி. எம். எஸ். சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி போன்ற பாடகர்களும் வந்து இருந்தார்கள். அவர்கள் பாட, அந்தப் பாடலுக்கு நாங்கள் நடனம் ஆடுவோம். நாங்கள் படத்தில் நடித்திருந்த நகைச்சுவை காட்சிகளை நடித்தும் காட்டுவோம். இப்படி நேரலையாகப் பாடலோ,  நாடகமோ மேடையில் செய்து காட்டி ரசிகர்களை மகிழ்விப்போம். 

படத்தில் ஆடிய நடனத்தை மேடையில் ஆடுவதா? என்று யோசிப்பேன். நாகேஷ் அதை எல்லாம் பார்க்க மாட்டார். ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றால் சரி ஆடிவிடுவோம் என்று சொல்லி, என்னுடன் ஆடுவார். நாங்கள் இருவரும் ரசிகர்களுக்காக இப்படிப் பல விஷயங்களைச் செய்து இருக்கிறோம்.

"சொர்க்கம்' படத்திலும் இப்படிப்பட்ட மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகள் உண்டு. அந்தப் படத்தில் எனக்கு நான்கு வேடங்கள். நான்கு வேடங்களையும் நான் செய்யும் போது இயக்குநர் ராமண்ணா என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். "நீங்கள் இந்த வேடங்களைச் சிறப்பாகச் செய்து வீடுவீர்கள் என்று தெரியும். நகைச்சுவை மிளிரும், அதே சமயம், உங்களுக்குத் துணையாக எம். ஆர். ஆர். வாசு, நாகேஷ் இருவரும் இருக்கிறார்கள்,' என்றார். அவர் சொன்னது போலவே ஒவ்வொரு பெண்ணின் வேடமும் வித்தியாசமான வேடமாகத்தான் இருந்தது.  அந்தப் படத்தில் நாகேஷ் ஒரு பெண்ணைக் காதலிப்பார். அவளைப் பார்க்க நான் வசித்த  வீட்டுக்கு அவர் வருவார். ஒரு காட்சியில் அவர் வரும் பொழுது, என்னை காதல் ததும்பப் பார்க்க வேண்டும். அதற்கு இயக்குநர் ராமண்ணா ஆலோசனை ஒன்றை தெரிவித்தார்.

அப்போது வெளியான பிரபல ஹிந்திப் படம் "ஆராதனா' அதில் ஒரு பாடல் காட்சி வரும். ராஜேஷ்கன்னாவும், ஷர்மிளா தாகூரும் மழையில் நனைந்து, ஓர் அறையில் அகப்பட்டுக் கொண்டு விடுவார்கள். காமம், காதல், கலந்து ஒரு பார்வை பார்ப்பது போலவும், காட்சி அமைத்து இருப்பார். அந்தப் படத்தின் இயக்குநர் சக்தி சமந்தா. 

அந்தப் படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே ஹிட்டான பாடல். தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் இந்த "ஆராதனா' ஒரு வருடத்திற்கு மேல் அண்ணா சாலையில், அன்று இருந்த ஆனந்த் திரையரங்கில் ஓடிய படம். அதுவும் "ரூப் தேரா மஸ்தானா' பாடல் ஹிந்தியில் இருந்தாலும் நம் தமிழ்நாட்டில், பட்டி, தொட்டி எங்கும், எல்லா இடத்திலும் மிகப்பிரபலமான பாடல். அந்த "ஆராதனா' ஹிந்திப் படத்தின் இயக்குநர் சக்தி சமத்தா சென்னையில், சொன்ன விஷயத்தைப் பத்திரிகை பேட்டி ஒன்றில் படித்தேன்.

அந்தப் படத்தின் இசையமைபாளர் காலஞ்சென்ற எஸ். டி. பர்மன். அவருடைய மகன் தான் ஆர். டி. பர்மன். இவரும் பல வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். எஸ். டி. பர்மன் இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் போதே அவருக்கு 70 வயது இருக்கும். இவ்வளவு இளமையான இசையை அந்தப் படத்திற்கு எப்படித் தர முடிந்தது?

(தொடரும்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.