ட்ரீம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின தயாரிப்பில் உருவாகி வரும் படம் "இறுதிப்பக்கம்'. படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன்.
அவர் படத்தைப் பற்றி கூறும்போது, ""பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் திரையில் பார்க்கிற பாத்திரங்கள் . ஒன்று நல்லவனாக இருப்பான், அல்லது கெட்டவனாக இருப்பான், அல்லது நல்லவன் கெட்டவனாகத் தெரிவான், கெட்டவன் நல்லவனாக மாறுவான். இப்படி பார்க்கிறவர் கற்பனையில் உருவகித்துக் கொள்ளும்படித் தான் பாத்திரங்களின் அமைப்பு இருக்கும். ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் போது சோதனை முயற்சியான படைப்புகளைப் படிக்கும்போது படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை புலப்படும். வேறு விதமான கதைகளை, பாத்திரங்களின் இயல்புகளை உணர்வார்கள்.
அப்படித் திரைப்பட உலகில் ஒரு முயற்சிதான் இந்த "இறுதிப்பக்கம்'. ஒரு கொலை நடந்து இருக்கும் . அந்தக் கொலையைச் செய்தது யார்? என்பதுதான் வெளியே தெரியும் கேள்வி. ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு வகையான மனநிலையில் அதைப் பார்ப்பார்கள். வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அதுதான்இந்த படம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


