சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விக்ரம் சகோதரர் விக்டர்

தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு வரவு நடிகர் விக்ரமின் சகோதரர் அரவிந்த் ஜான் விக்டர்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 11:21 am

DIN

தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு வரவு நடிகர் விக்ரமின் சகோதரர் அரவிந்த் ஜான் விக்டர். கட்டுமானத் தொழிற்துறையில் இருந்த அவருக்கு சினிமா ஆசை எழ, அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். விருது பெற்ற தமிழ் குறும்படம், ஒரு கன்னட படம்,  ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகி வரும் வெப் சீரிஸ், வெளியாகவுள்ள எப்போ கல்யாணம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  

இது குறித்து அவர் பேசும் போது... "" எனது தந்தை வினோத் ராஜின் ஆசையும் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதாக இருந்தது. ஒரு கட்டத்தில் தொழிலில் உச்சத்தை அடைந்தேன். அதன் பின்னர் அண்ணன் விக்ரம் ஒப்புதலோடு சினிமாவுக்கு வந்திருக்கிறேன். நல்ல சினிமா பற்றி நிறைய கனவுகள் உண்டு. கலைஞனின் கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகர்களின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவடையும்.  

ஹீரோ, ஹீரோயின் என்பதைத் தாண்டி, கதை இருந்தால்தான் அந்த படத்துக்கு வெற்றி கை கூடும். இந்த மாற்றம்தான் சினிமாவுக்கு முக்கியமானது. ஹாலிவுட்டில் இது எப்போதோ வந்து விட்டது. இங்கே இப்போதுதான் நடந்துக் கொண்டு வருகிறது. பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். எனக்கும் அப்படித்தான். கதைதான் முக்கியம். இதுதான் கதை என தீர்மானமாக பிடித்து விட்டால், அந்த கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். 

ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும்'' என்றார் ஜான் விக்டர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.