ரங்கோலி

கோபுரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ரங்கோலி'.  பாபுரெட்டி, சதீஷ்குமார் இருவரும் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
ரங்கோலி
Published on
Updated on
1 min read

கோபுரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ரங்கோலி'.  பாபுரெட்டி, சதீஷ்குமார் இருவரும் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.  இவர் இயக்குநர் வஸந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.  இப்படத்தின் மூலம் இயக்குநர் ஏ.எல். விஜய்யின் சகோதரி மகன் ஹமரேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரார்த்தனா அறிமுகமாகிறார்.  

படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""உறவுகள்தான் மனித வாழ்வின் ஆதாரம். அதை விட்டு வெளியேற நினைக்கிற மனப்பாங்கு இப்போது விரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வரலாறு இருக்கிறது. பிறக்கும் போது அவனோடு பிறக்கிற வரலாறு, அவன் இறந்த பின்னாலும் அவனது உறவுகள் மூலம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களை தவிர வேறு எதையும் விட்டு போக கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. அப்பா - மகன் பாச, நேசத்தை சொல்கிற கதை. 

மகனை உயரத்தில் வைத்து பார்க்க நினைக்கும் தந்தை. தந்தையின் துயரத்தில் பங்கெடுக்க நினைக்கும்  பிள்ளை என ஓர் அழகான வாழ்வியல் சார்ந்த படம். தமிழ் மற்றும் தெலுங்கில் படம் உருவாகி வருகிறது. மே மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இசை- கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி.  ஒளிப்பதிவு- மருதநாயகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com