குழந்தையின் அன்பு
"ரெவனிர்'. இது ஒரு பிரெஞ்சு படம். 71 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம், பார்ப்பவரை உலுக்கும் கதையமைப்பு கொண்டது.


"ரெவனிர்'. இது ஒரு பிரெஞ்சு படம். 71 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம், பார்ப்பவரை உலுக்கும் கதையமைப்பு கொண்டது.
அந்தப்படம் புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டிக்கும், சிறுவனுக்கும் உள்ள பாசம் குறித்தப் படத்தை இயக்கியவர் ஜெசிகா பால்ட்.
கதை என்ன?
ஏழு வயது சிறுவன் அலெக்ஸ். அலெக்ஸின் தாயார் சொல்கிறார்:
எங்கள் பசுக்களிள் தொழுவம் எங்கள் இல்லத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது.
எங்கள் சிவப்புப் பசு ஒரு வெள்ளைக் கன்றுக்குட்டியை ஈன்று இருந்தது. அன்று காரில் நானும்- என் கணவரும் எங்கள் அருமை மகன் அலக்சும் பசுக்களைப் பார்த்து வரச் சென்றோம்.
பசுக்கள் இருக்கும் தொழுவத்தை அடைந்தோம். சிவப்பு பசு தன் கன்றை நாவால் நக்கிக் கொண்டு இருந்தது. கன்றைப் பார்த்ததுமே, அலெக்ஸ் குதூகலம் அடைந்தான்.
நான் உணவு செலுத்தும் பாட்டிலில் பாலை நிரப்பிக் கொண்டு கன்றுக்கு ஊட்டத் தொடங்கினேன்.
கன்றுக்குட்டி ஆவலுடன் பீடிங் பாட்டிலில் இருந்த பாலை உறிஞ்சிக் குடித்தது. அலெக்ஸ் கன்றுக் குட்டியின் முதுகை அன்புடன் தடவிக் கொடுத்தான்.
தொழுவத்திற்கு அருகில் இருந்த நீச்சல் குளத்தில் நீந்திக்களித்தோம். அலெக்ஸ் குளித்தான். டவல் எடுத்து அவன் தலையைத் துவட்டினேன். அலெக்சின் பேச்சு அன்று முழுக்க கன்றுக் குட்டியை பற்றியே இருந்தது.
அன்று திடீரென்று வீட்டில் இருந்து அலெக்ஸ் காணாமல் போனான்.
""அலெக்ஸ் எங்கே போய் இருப்பான்? அவன் பள்ளிக்கூட நண்பர்களின் வீடுகளில் தேடிப் பார்க்கலாமா?'' என்றார் என் கணவர்.
எங்கள் தேடல் வைபவம் தொடங்கியது. அலெக்ஸ் அவன் நண்பர்களின் வீடுகளில் இல்லை. எங்கள் இல்லத்தின் அருகில் இருந்த தோட்டம் தோப்புகள் இங்கெல்லாம் தேடினோம். அலெக்ஸ் இல்லை.
அண்டையில் இருக்கும் எங்கள் நண்பர் ஒருவர் பார்வையில் தட்டுப்பட்டார்.
""ஐயா அக்கம்-பக்கம் எங்காவது எங்கள் அலெக்ஸைப் பார்த்தீர்களா?''
""இல்லையே அம்மா?'' என்று அவர் சொன்னதும் எனக்குத் திகில் உண்டானது.
""எங்கு தான் போயிருப்பான். எங்கள் செல்லம்?'' என்று நான் தேம்பிய போது என் கணவர் என்னை ஆசுவாசப்படுத்தினார்.
தூரத்தில் ஒரு காரின் ஹெட் லைட் வெளிச்சம் எங்கள் கண்களை கூச வைத்தது.
காரின் கதவைத் திறந்து கொண்டு எங்கள் நண்பர் ஒருவர் வெளிப்பட்டார். கூடவே எங்கள் அலெக்ஸ் இருந்தான். என் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.
""அலெக்ஸை எங்கே கண்டுபிடித்தீர்கள்?'' என்று என் கணவர் ஆவலாகக் கேட்டார்.
""உங்கள் பண்ணை வீட்டுக்கருகில் கண்டேன்'' என்று அவர் சொன்னதும்.
""அலெக்ஸ் பண்ணை வீட்டருகே உனக்கு என்ன வேலை?'' என்று நான் கோபித்தேன்.
""கன்றுக்குட்டியை கொஞ்சி விட்டு வரச் சென்றேன்?'' என்றான்.
""நான்கு மைல்கள் நடந்தா சென்றாய்?''
""ஆமாம்'' என்று தலை ஆட்டினான்.
பிஞ்சுப் பயல்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...