உலகில் வருமான வரி வசூலிக்காத நாடுகளும் சில உள்ளன. இங்கு வசிப்போர் எவ்வளவு சம்பாதித்தாலும், அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை.
பஹாமஸ்
இந்த நாடு தனது குடிமக்களிடம் வருமான வரியை வசூலிப்பதில்லை. இந்த நாடு குடியுரிமையை சார்ந்திருக்காமல், வசிப்பிடத்தைச் சார்ந்துள்ளது. இருப்பினும், நிரந்தரக் குடியிருப்போருக்கு குறைந்தபட்ச வசிப்பிடத் தேவை என்பது 90 நாள்களாகும். வெளிநாட்டவர்களைப் பொருத்தவரையில், அவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சொத்துகள் வைத்திருக்க வேண்டும். அவர்கள் அரசுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கேற்ப கொள்முதல் தொகையை பூர்த்தி செய்ய வேண்டும்.
மொனாக்கோ
அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்று. மிகவும் அழகிய நாடாக உள்ள மொனாக்கோ தங்குவதற்கு ஏற்ற இடம். இங்கும் வருமான வரி கிடையாது. இங்கு தங்குவதற்கே சட்டப் பூர்வ குடியிருப்பு அனுமதியைப் பெற வேண்டும். அது மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், அதற்கு 5 லட்சம் யூரோக்கள் செலவாகும். இங்கு குற்ற விகிதம் மிகவும் குறைவு.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
மத்திய கிழக்கில் உள்ள பல எண்ணெய் வள நாடுகளில் வருமான வரி அல்லது பெருநிறுவன வரி இல்லை. இவற்றில் ஒன்றுதான் ஐக்கிய அரசு எமிரேட்ஸூம். இது ஒரு செழிப்பான பொருளாதாரம், கலாசாரச் சூழலைக் கொண்டுள்ள நாடு.
பெர்முடா
இங்கு இளம்சிவப்பு மணல் கடற்கரைகள், உயர்ந்த உணவகங்கள், இயற்கை அழகுக்கு மிகவும் பிரபலமானது. இந்த நாட்டிலும் வருமான வரி அறவே கிடையாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெனிசுவேலா நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியது

லமின் யமால் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர்... மெஸ்ஸி புகழாரம்!

ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கவலையில்லை: பயிற்சியாளர்

9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்!
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



