தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபாஸின் விருந்தோம்பல் குறித்து பரவலான பேச்சு உண்டு. இது குறித்து சமீபத்தில் தமன்னா தெரிவித்திருப்பது.... ""பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது. அவரை பொருத்தவரை உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அளவில் முப்பதுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார். காந்தம் போன்ற மாயஜால வித்தையைக் காண்பது போலிருக்கும். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது.
எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவராக பிரபாஸை சொல்லலாம். அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன் பணியாற்றும் சக நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவர் மீதும் அவர் காட்டும் அக்கறையுடன் கூடிய அரவணைப்பு அலாதியானது. அவரது இந்த விருந்தோம்பல் பண்பு அவருடன் பணியாற்றும் சூழலை எப்போதும் இதமாக வைத்திருக்கும்'' என கூறியிருக்கிறார். இதனிடையே நடிகை தமன்னா மட்டுமல்ல.
நடிகைகள் பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா கபூர், ஸ்ருதிஹாசன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் பிரபாஸின்ன் மாயஜால விருந்தோம்பலில் நனைந்து, அவரைப் பற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


