தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அபிராமி அந்தாதி இயலும், இசையும்..!

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர்அபிராமி கோயிலில் எழுந்தருளியுள்ள அபிராமி தேவி குறித்து  அபிராமி பட்டர் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பேஅபிராமி அந்தாதி.

News image
Updated On :8 ஜூலை 2023, 6:30 pm

எஸ். சந்திர மௌலி

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர்அபிராமி கோயிலில் எழுந்தருளியுள்ள அபிராமி தேவி குறித்து  அபிராமி பட்டர் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே அபிராமி அந்தாதி.  சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும்.

பாடல்களுக்கு  அவற்றின் விளக்கத்தையும் தமிழில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா எழுதியிருக்கிறார்.  இந்தப் பாடல்களை ராஜ்குமார் பாரதி இசையில், கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி கிரீஷ் பாடியுள்ளார். இவை GayathriGirishOfficial என்ற யூடியூப் சேனலில் ஜூன் 17 முதல் காணொளிகளாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்  ஒளிபரப்பாகின்றன. 50 எபிசோடுகளாக ஆறு மாதங்கள் ஒளிபரப்பாகும்.

"அபிராமிஅந்தாதி  இயலும் இசையும்'  முயற்சி குறித்து காயத்ரி கிரீஷ் கூறியதாவது:

""சவுந்தர்யலஹரி,  லலிதாசஹஸ்ரநாமம்போல மிகவும் சீரும்,  சிறப்பும் வாய்ந்தது அபிராமி அந்தாதி.  ஒவ்வொரு வீட்டிலும் மங்கலம் தருவது.  மகிழ்ச்சி தருவது.  கல்வி, தனம், தானியம் பெருகுவதற்கு அம்பாளின் அருளை அளிப்பதாகும்.  இது என்னுடைய நெடு நாளைய கனவு.  இப்போது நிறைவேறி வருகிறது. 

நூறு பாடல்களுக்கும் ராஜ்குமார் பாரதி இசை அமைத்திருக்கிறார்.  வெறும் பாடல் மட்டுமில்லாமல், அந்தப் பாடல்களின் விளக்கத்தையும் எல்லோருக்கும் புரியும்படிச் சொன்னால் இன்னும் பயனுள்ளதாக இருக்குமே என்று நினைத்து உருவாக்கி இருக்கிறோம்.

நூறு பாடல்கலையும் வெவ்வேறு ராகங்களில், வெவ்வேறு தாளங்களில் இசை அமைத்து பாடுவது சவாலான பணிதான். ஆனாலும், மிகுந்த அர்ப்பணிப்புடன் மனம் லயித்துப் பாடியது எனக்கு ஆத்ம திருப்தியை அளித்தது. 

திருக்கடையூருக்கே நேரில் சென்று, படம் பிடித்தது மிகவும் பொருத்தமாக அமைந்தது. 

தமிழ் இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான அந்தாதி கவிதைகள் எழுதப்பட்டிருந்தாலும்கூட அபிராமி அந்தாதிக்கு மற்ற எதற்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அந்தப் பாடல்கள் கட்டளைக் கலித்துறை என்ற யாப்பிலக்கணத்தின்படி, அந்தாதி வகைப்பாட்டில் அமைந்தவை.  அதாவது முதல் பாடலின் கடைசிச் சொல்லே,  அடுத்த பாட்டின் முதல் சொல்லாக அமையும்.  இந்த முயற்சிக்கு தருமபுரம் ஆதீனம் குரு மகா சந்நிதானம் அருளாசி வழங்கினார். காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திரரும் அருளாசி வழங்க உள்ளார். 

திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில்,  காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும்  படப்பிடிப்பு நடைபெற உள்ளன'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.