தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சிக்கு புக்கு.. சிக்கு புக்கு ரயிலே

கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்தான் உலகின் மிகப் பெரிய ரயில் நிலையமாகும். இது அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2023, 6:30 pm

ஆ. கோ​லப்​பன்

கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்தான் உலகின் மிகப் பெரிய ரயில் நிலையமாகும். இது அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ளது.  48 ஏக்கரில் இந்த ரயில் நிலையம் 1903-ஆம் ஆண்டு முதல் 1913 வரை 10 ஆண்டுகளாகக் கட்டப்பட்டது. இங்கு 44 நடைமேடைகள் இருப்பதால், ஒரே நேரத்தில் 44 ரயில்கள் நிற்க முடியும். 

தினமும் சராசரியாக, 660 மெட்ரோ ரயில்கள் செல்கின்றன.  இரு அன்டர்கிரவுன்ட் நிலைகள் உள்ளன. 41 தடங்கள் மேல் மட்டத்தில் செல்கின்றன. 

இரண்டாம் உலகப் போரின்போது,  அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெட் சக்கர நாற்காலியின் உதவியுடன் நேரடியாக இங்குள்ள ரகசிய நடைமேடைக்கு வந்து பயணித்துள்ளார்.  "டிராக் 61' என்று அழைக்கப்படும் அந்த நடைமேடை இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் ரயில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோர் கப்பல், விமானங்களில்தான் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால்,  ஏழு ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லலாம்.

வங்கதேசம் செல்ல..: ஹல்டிபாரி ரயில் நிலையம் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது.  புதிய ஜல்பைகுரி நிலையத்தின் மற்றொரு நிலையமாக இந்த ரயில் நிலையம் உள்ளது.  வங்க தேசம் இங்கிருந்து வெறும் 4.5. கி.மீ. தூரம்தான். எளிதாக அங்கு செல்லலாம்.

பெட்ரோ போல் ரயில் நிலையத்தில் இருந்து வங்க தேசத்துக்கு செல்ல ரயில் உண்டு. இந்த ரயில் நிலையம் இந்தியா, வங்க தேச நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதிகளுக்காகப் பயன்படுகிறது.

சிங்காபாத் ரயில் நிலையம் மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து வங்க தேசத்துக்கு ரோகன்பூர் வழியாக ரயில் செல்கிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள ராதிகாபூர் ரயில்  நிலையம் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த ரயில் நிலையம் ஜீரோ பாயின்ட் ரயில் நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து வங்க தேசத்துக்கு ரயில்கள் செல்கின்றன. 

நேபாளம் செல்ல...: பீகார் மாநிலத்துக்கு உள்பட்ட மதுபனியில் ஜெய்நகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நேபாளத்துக்கு வேறொரு மார்க்கமாக ரயில் செல்கிறது.  

பீகாரில் உள்ள ஜோக்பனி ரயில் நிலையத்தில் இருந்தும் நேபாளத்துக்கு ரயிலில் செல்லலாம். ரயிலில் மட்டுமல்ல; குறைந்த தொலைவு என்பதால், இங்கிருந்து நடந்தே கூட நேபாளம் செல்ல முடியும். 

பாகிஸ்தான் செல்ல..: பஞ்சாப்பில் உள்ள அட்டாரி ரயில் நிலையம் மிகவும் பிரபலமானது.  வடக்கு ரயில்வேயின் கீழ் செயல்படும் இந்த ரயில் நிலையத்தில் இயங்கும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வாயிலாக, பாகிஸ்தானுக்கு வாரத்தில் இரு நாள்கள் ரயில் இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.