தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

எங்கும்... எப்போதும்..!

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட "லைட் காம்பவுன்ட் ஹெலிகாப்டர்' (எல்.சி. ஹெச்.) .

News image
Updated On :16 ஜூலை 2023, 11:24 am

ஆ. கோ​லப்​பன்


இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட "லைட் காம்பவுன்ட் ஹெலிகாப்டர்' (எல்.சி. ஹெச்.) .  ஜோத்பூரில்  நடைபெற்ற நிகழ்ச்சியில்,  10 ஹெலிகாப்டர்கள் விமானப்படையிடம் சேர்க்கப்பட்டன. ஒப்படைக்கப்பட்ட நாளன்று, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கே விமானியாகப் பயணித்து, சிறப்பைச் சேர்த்தார்.

இந்த ஹெலிகாப்டர்களை பெங்களூரிலுள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்  உருவாக்கியது.  

இதன் சிறப்பம்சங்கள்:

தாக்குத் திறன் பெற்ற ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர்கள். 
எதிரிகளின் ராடார் வளையத்தில் சிக்காமல் பறக்கும் ஸ்டைல் அமைப்பு.
இரட்டை இருக்கைகள், ஹெலினா பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள். ஏவுகணைகளையும், விமானங்களையும் தாக்கி அழிக்கும் எம்.பி.டி.ஏ. ஏவுகணை, ராக்கெட்டுகள், இயந்திரத் துப்பாக்கிகள் போன்ற உபகரணங்களை  கொண்டது.
உயரமான பகுதிகளில் மிக அதிக நேரம் பறக்க இயலும்.
கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் லேண்ட் செய்யும். அங்கிருந்தே எடைகளுடன் பறந்து உயரும் திறனும் கொண்டது.
சீனாவுடன் மோதல் நிகழும் கிழக்குப் பகுதிகளில் பயன்படுத்த ஏற்றது.
இரவிலும்,  மோசமான காலநிலையிலும் தாக்குதல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.