சீதாராமம் படத்துக்கு சைமா விருது 

தென்னிந்திய சினிமா முழுமைக்கும் பயணப்பட்டு வருகிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.
சீதாராமம் படத்துக்கு சைமா விருது 
Published on
Updated on
1 min read


தென்னிந்திய சினிமா முழுமைக்கும் பயணப்பட்டு வருகிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். இவரது இசையை தற்போது சைமா விருது அலங்கரித்து இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட  தென்னிந்திய மொழிகளில் குறிப்பிடத்தகுந்த கவனிப்பை பெற்றுள்ள இவருக்கு சீதாராமம் படத்துக்காக இவ்விருது கிடைத்துள்ளது.  இது தவிர இவரது இசையில் சமீபத்தில் வெளிவந்துள்ள சித்தா படத்தின் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  இது குறித்து விஷால் சந்திரசேகர் பேசும் போது.... "" சீதாராமம் படத்துக்காக கிடைத்துள்ள சைமா விருது எனக்கு சிறந்த உத்வேகத்தை தந்துள்ளது. 

அடுத்தடுத்த பயணங்களுக்கான எரிபொருளாக இந்த விருது இருக்கும். தேர்வு செய்த விருது குழுவினருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  குக்கு எஃப் எம் என்ற ஆஃப் ஆடியோ புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அதில் சமீபத்தில் வெளியான "லாக்கப்' என்ற ஆடியோ புத்தகத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த பணியில் அயாரது பாடுபட்டேன். அதற்கு பலன் கிடைத்துள்ளது.  அடுத்ததாக பொன்னியின் செல்வன் காலத்துக்கு முன் சோழ தேசத்தை ஆட்சி செய்த அரசன் கரிகாலன் பற்றி ஆராய்ச்சி செய்து ஒருவர் எழுதிய கதை ஒன்பது எபிசோடுகளாக  வெளிவரவுள்ளது.  

அந்த ஆடியோ புத்தகத்தை கண்ணை மூடி கேட்டால், ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது பார்ப்பதுபோல் அதாவது பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பது போல் உணர வைக்கும். அதற்கு இசையமைக்கிறேன். இயக்குநர் திரு இயக்கத்தில் உருவாகி வரும் தமிழ்ப் படத்துக்கு இசையமைக்கிறேன். நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் "திரு மாணிக்கம்' படத்திற்கு இசையமைத்து வருகிறேன்.  சமீபத்தில் வெளியான சித்தா படத்தின் பின்னணி இசை கவனிக்க வைத்துள்ளது. இது தவிர தெலுங்கு, மலையாளத்தில் இரு படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com