
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த "டிஎஸ்பி' படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமானவர் அனுக்ரீத்தி வாஸ். மாடலிங் மூலம் சினிமாத் துறையில் நுழைந்துள்ள நடிகை. படித்துக் கொண்டு இருக்கும் போதே மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று பட்டம் பெற்றவர். "டிஎஸ்பி' படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரவிதேஜா நடித்து சமீபத்தில் வெளியான "டைகர் நாகேஸ்வர ராவ்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஜெயவாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். "டிஎஸ்பி' படத்தில் நடித்த கதாப்பாத்திரத்தை விட இது முற்றிலும் மாறுபட்ட கடினமாகவும் சவாலாகவும் இருந்தது என்கிறார். 'இந்த ஜெயவாணி கதாபாத்திரம் குறித்து நல்ல பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஏதோ ஒரு பெரிய வாய்ப்பு வரும் என்று வீட்டில் யாருமே சும்மா இருக்க முடியாது. அதுதான் காரணம். அதே சமயம், நீங்கள் நினைக்கிற மாதிரி சீரியஸான படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பது மாதிரியான எண்ணம் எல்லாம் எனக்கு இருந்தது இல்லை.
ஒரு நடிகை இந்தப் பாத்திரங்களுக்குத்தான் சரி என்று தீர்மானிக்கப்படுவது எந்த விதத்திலும் நல்லது இல்லை. சொல்லப்போனால், தெலுங்கு மசாலா படங்களில் நடிப்பது எனக்குக் கூடுதல் சந்தோஷம். சவாலான தமிழ் கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன்'' என்றார் அனுகீர்த்தி வாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.