ஆர்.கே. கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "அப்பு ஐந்தாம் வகுப்பு'. கல்லூரி, ஸ்கெட்ச், அயோத்தி உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்த வினோத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
வீரா, ஜீவன் பிரபாகர், பி.எல். தேனப்பன், வேலுபிரபாகரன், பிரியங்கா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் வசீகரன் பாலாஜி. ஆலன் விஜய் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு இயக்குநராக பணியாற்றுகிறார்.
மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மன பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களை பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும். எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்கள் ஏராளமாக இருந்துக் கொண்டேதான் இருக்கின்றன.
ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம். தந்தைக்கும் மகனுக்குமான உறவு
என்பது கதை நகருவதற்கான ஒரு வழிதான். அதைத்தாண்டி சில சுவாரசிய புள்ளிகளும் இக்கதையில் உன்டு'' என்றார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.