ஐக்கிய ராஜ்ஜியத்தில் (யூ.கே.) உள்ள ஒரு நாடுதான் வேல்ஸ். தனி நாடாளுமன்றமும் உண்டு. இதனை "கோட்டைகளின் தலைநகரம்' என்று அழைக்கின்றனர்.
இந்த நாட்டில் உள்ள 8,192 சதுர மைல்களில் 600 கோட்டைகள் உள்ளன. இதனை அரண்மனைகள் என்றும் கூறலாம்.
உலகில் சுமார் 10 லட்சம் கோட்டைகள் உள்ளன. 45 ஆயிரம் கோட்டைகளுடன் இத்தாலி நாடு முதலிடத்தையும், 40 ஆயிரம் கோட்டைகளுடன் பிரான்ஸ் இரண்டாமிடத்தையும்,
25 ஆயிரம் கோட்டைகளுடன் ஜெர்மனி மூன்றாமிடத்தையும் பெறுகின்றன. ஐக்கிய ராஜ்ஜியத்தில் 4 ஆயிரம் கோட்டைகளே உள்ளன.
பிறகு ஏன் வேல்ஸ்ஸை "கோட்டைகளின் நகரம்' என்று அழைக்கின்றனர் என்றால் அதன் வரலாறு மிகவும் சுவாரசியமானது. வேல்ஸ் அதனுடைய வரலாற்றில் பல ஐரோப்பிய அரசுகளால், பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
காப்பாற்றிக் கொள்ள கோட்டைகள் நிச்சயம் வேண்டும். வேல்ஸூக்குள்ள பல மன்னர்கள் இருந்ததுண்டு. அவர்களுக்கு தாக்குதல்கள் சகஜமானது. இதனால், இளவரசர்கள் ஆளுக்கொரு கோட்டையைக் கட்டிக் கொண்டனர். குறிப்பிட்ட பகுதிக்குள் நிறைய கோட்டைகள் இருப்பதால், "கோட்டைகளின் தலைநகரம்' என்று அழைக்கின்றனர்.
வேல்ஸின் சில சிறந்தக் கோட்டைகளை எட்வர்ட் 4 என்பவரே கட்டினார். பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பீயுமரிஸ், கோனார்ஃபோன், கான்வி, ஹார்லெக் போன்ற கோட்டைகள் பிரபலமானவை.
ப்யூமரிஸ் கோட்டையும் கண்களைக் கவரும். இது நீர் நிரப்பப்பட்ட அகழியுடன் கூடியது. உயரமான பாறைகள், சுத்த பாறைகளால் பாதுகாக்கப்படும் சூழல், ஆழமான பள்ளங்கள் ஆகியவற்றால் கட்டப்பட்டவை. மொத்தத்தில் அனைத்துக் கோட்டைகளுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால், கோட்டையைச் சுற்றிவந்தால், "போதுமடா சாமி' என்று கூறிவிடுவார்கள்.