என்கவுன்ட்டர் பின்னணி கதை

ராமலட்சுமி புரொடக்ஷன்ஸ் மற்றும் அனுசியா பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து கம்பெனி தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கலன்'.
கலன்
கலன்
Published on
Updated on
1 min read

ராமலட்சுமி புரொடக்ஷன்ஸ் மற்றும் அனுசியா பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து கம்பெனி தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கலன்'. இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, சிவகங்கை, மதுரை, ஒட்டன்சத்திரம், ஒத்த ஆலங்குளம், வளையங்குளம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அப்பு குட்டி, தீபா, சம்பத் ராம், மணிமாறன், சேரன்ராஜ், யாசர் காயத்ரி, பீட்டர் சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜெர்சன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஜே.கே. பணியாற்றியுள்ளார்.

படத்தொகுப்பாளராக விக்னேஸ்வரன் இயங்கி வருகிறார். பாடல் வரிகளை குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் எழுதியுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் நடிகர் மணிமாறனுக்கு ஒரு விரல் தனியாக துண்டிக்கப்பட்ட போதும் படத்தை நிறுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தை வீரமுருகன் இயக்கியுள்ளார்.

இவர் "கிடுகு' உள்ளிட்ட படங்களை இயக்கி தயாரித்து உள்ளார். "கிடுகு' திரைப்படத்திற்கு தணிக்கை துறையில் 270 கட் செய்யப்பட்டது. ஆனால் "கலன்' திரைப்படத்திற்கு ஒரே ஒரு கட் மட்டும் தணிக்கை துறையால் செய்யப்பட்டு. தணிக்கை துறையினர் இயக்குநர் வீரமுருகனை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். தென் மாவட்டங்களில் நடக்கும் என்கவுன்ட்டர் பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படம் ஜனவரி 3-ஆம் தேதி 100 திரையரங்குகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வெளியிடப்படவுள்ளது. ஹரி உத்ரா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com