பணப் பரிவர்த்தனை கூடுதல் கவனம் தேவை!

பணப் பரிவர்த்தனை கூடுதல் கவனம் தேவை!
Published on
Updated on
1 min read

இன்றைய வாழ்க்கை முறையில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது இயல்பானதாக இருக்கிறது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் அடித்தளமாக, யு.பி.ஐ. மேடை அமைந்துள்ளது. டிஜிட்டல் பணப் பரிமாற்ற வசதியை எளிதாக்கியுள்ளது. இருந்தும், இந்த வசதியின் பரவலான நிலையில், பலவிதமான வழிகளில் விஷமிகள் மோசடியில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.

சிம் மோசடி, மொபைல் திரை கண்காணிப்பு, பிஷிங் என சொல்லப்படும் தவறான இணைப்புகளை அணுக வைப்பது, மோசடி அழைப்புகள், பண ஆசை காட்டுவது உள்ளிட்ட வழிகள் எனப் பின்பற்றப்படுகின்றன.

பலவித வழிகள் பயனாளிகளை ஏமாற்ற பின்பற்றப்பட்டாலும், ஏமாற்றுபவர்கள் அணுகுமுறையில் ஒருவித தொடர்பு இருப்பதை காணலாம். பெரும்பாலும், வங்கிகளில் இருந்து தகவல் வந்திருப்பதாக நம்ப வைத்து, அடிப்படை தகவல்களை பகிர வைத்து, பயனாளி கணக்கிற்குள் நுழைகின்றனர்.

பணம் பெறும்போது அல்லது அனுப்பும்போது அல்லது பயனாளிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணம் அனுப்பும் வசதி மோசடியாளர்களால் அதிகம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. ரகசிய எண்ணை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் அவசியமாகும். அடிக்கடி வங்கி கணக்கு இயக்கத்தை கண்காணிக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி அறிவுறுத்தும் நெறிமுறைகளைப் பின்பற்றி டிஜிட்டல் பண மோசடியில் இருந்து தற்காத்துகொள்ள வேண்டும். பணம் அனுப்பும் கோரிக்கை தொடர்பான எச்சரிக்கை, மோசடி அழைப்புகள் குறித்த கவனம், சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருப்பது முக்கியம். வங்கிகள் இதுபோன்ற தகவல்களைக் கோருவதில்லை என்பதை மனதில் எப்போதும் கொள்ள வேண்டும்.

இதுதவிர பொது இணையம் அல்லது பொது வை-பை கொண்டு வங்கிக் கணக்கை அணுகுவதைக் கைவிட வேண்டும். எச்சரிக்கையான அணுகுமுறை தற்காப்புக்கு உதவும் என்றாலும், எதிர்பாராதவிதமாக பாதிப்பு ஏற்பட்டால் உடனே வங்கியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com