ராக்கெட் டிரைவர்

விஷ்வந்த் நடிக்கும் 'ராக்கெட் டிரைவர்': ஆகஸ்டில் திரைக்கு
ராக்கெட் டிரைவர்
Published on
Updated on
1 min read

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ராக்கெட் டிரைவர்'. விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் உள்ளிட்டோ நடிக்கின்றனர். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஸ்ரீராம் அனந்த சங்கர். ஃபேண்டசி, டிராமா- காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக இதன் கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது...

""தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். தனது ரோல் மாடலை அவரது 17-ஆவது வயதில் காண்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை'' என்றார். இந்த படத்திற்கு கெளஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ரெஜிமல் சூர்யா தாமஸ் மேற்கொள்கிறார்.

படத்தொகுப்புப் பணிகளை இனியவன் பாண்டியன் கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் கருந்தாமலை, ஷில்பா ஐயர் ஆடை வடிவமைப்பு, சுரேஷ் ரவி டி.ஐ. பணிகளையும் மேற்கொள்கின்றனர். தயாரிப்பு நிர்வாகியாக செல்வேந்திரன் பணியாற்றும் இந்தப் படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை சங்கரன் மற்றும் சித்தார்த்தா மேற்கொள்கின்றனர். அக்ஷய் பொல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் அனந்த சங்கர் இணைந்து எழுதியிருக்கும் இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் படம் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com