பல மொழிப் பாடகி ஷ்ரேயா கோஷல் அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர். இவரது வெற்றியின் பின்னணியில் கணவர் ஷிலாத்தியா முகோபாத்யாயா இருக்கிறார்.
நாற்பது வயதாகும் ஸ்ரேயா கோஷலின் சொத்தின் மதிப்பு சுமார் ரூ.240 கோடிகள். கணவர் ஷிலாத்தியா முகோபாத்யாயா 'ட்ரு காலர்'
நிறுவனத்தின் சர்வதேசப் பிரிவின் இணைத் தலைவராகப் பணிபுரிகிறார். 'ட்ரு காலர்' நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மட்டும் சுமார் ரூ.1,406 கோடிகள் ஆகும். நிறுவனத்தின் மொத்த
விற்பனை வருவாயில் முக்கால் பங்கு வருமானம் இந்தியாவிலிருந்து கிடைக்கிறது.
ஸ்ரேயாவும் ஷிலாதித்யாவும் குழந்தை பருவத்திலிருந்தே அறிமுகமானவர்கள். பெரியவர்களானதும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2015-இல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2021-இல் ஆண் குழந்தை பிறந்தது. ஷிலாதித்யா முகோபாத்யாயா இரண்டு'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு உரிமையாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.