அறுபத்து ஐந்து வயதைக் கடந்தவரா?
அறுபத்து ஐந்து வயதைக் கடந்தவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:
கூடுமானவரை துணை இன்றி, படிகளில் ஏறாதீர்கள்.
வேகமாகத் திரும்பாதீர்கள்.
கால் பாதத்தைத் தொடுமாறு குனியாதீர்கள்.
நின்றவாறு கால்சட்டையை மாட்டிக் கொள்ளாதீர்கள்.
எதையும் பிடிக்காமல் மல்லாக்கப் படுத்தபடி தலையை உயர்த்தி எழுந்திருப்பதற்கான பயிற்சிகளைச் செய்யாதீர்கள்.
இடுப்பை இடமும் வலமுமாகத் திருப்பாதீர்கள்.
பின்புறமாக நடக்காதீர்கள்.
எடை கூடிய பொருள்களைக் குனிந்து தூக்காதீர்கள்.
படுக்கையில் இருந்து எழும்போது உடனடியாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ செய்யாதீர்கள்.
எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால், இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள். அடைத்துகொண்ட உணவானது தானாக இறங்கும்.
சரியான தலையனையை உபயோகிக்காவிட்டால் கழுத்து வலிக்கும். அப்போது கால்களை ஒவ்வொன்றாக உயர்த்தி கால் விரல்களை மிருதுவாகப் பிசைந்து கொள்ளுங்கள். வலி சரியாகும்.
-கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்கு ஏற்பட்டது போல் வலியோ வந்தால் எதிர்பக்கமாகக் கையை உயர்த்த வேண்டும். வலது கால் வலித்தால் இடது கையையும் இடது கால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள். நீங்கள் நலமாக உணர்வீர்கள்.
திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால் எதிர் புறத்து உள்ளங்கையை வேகமாகக் சுழற்றுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.