பூங்காவில் நடக்கும் கதை

பூங்காவில் நடக்கும் சஸ்பென்ஸ் ஹாரர் காமெடி த்ரில்லர்
பூங்காவில் நடக்கும் கதை
Published on
Updated on
1 min read

ஹாரர் பாணியில் உருவாகி வரும் படம் 'பார்க்'. இப்படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார் முருகன்.

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் நடராஜ் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

தமன்குமார் நடித்துள்ளார். ஸ்வேதா டோரதி, யோகிராம், நடராஜ், பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் முருகன் பேசும் போது....''இது ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் காமெடி கலந்த த்ரில்லர் என்ற வகையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையைத் தயாரிப்பாளரிடம் கூறிய போது நான் சொன்னேன். படத்தின் முதல் பாதி வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்; இரண்டாவது பாதி இதயம் வலிக்கப் பயமுறுத்தும் என்றேன்.அதன்படி கதையையும் சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தது. அவருக்கு சினிமா மீது காதல் உண்டு.

எனவே இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்தார். சரியாகத் திட்டமிட்டு 36 நாள்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்து, படத்தை நிறைவு செய்திருக்கிறோம்.எத்தனையோ பேய்ப் படங்களைப் பார்த்திருக்கிறோம். அதில் பேயை ஓட்டுவதற்கு ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்த சாமியார்கள் வருவது போல் தான் காட்டுவார்கள். ஆனால் இந்தப் படத்தில்தான் எந்த மதத்தைச் சார்ந்தவரும் பேய் ஓட்ட வரவில்லை. வேறொரு முறையில் அந்தப் பேயை ஓட்டுவதாகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது'' என்றார். ஒளிப்பதிவு பாண்டியன் குப்பன்.

இசை ஹமரா சி.வி, படத்தொகுப்பு குரு சூர்யா, நடனம் ராபர்ட் மற்றும் சுரேஷ் சித், கலை இயக்கம் ஆர் வெங்கடேஷ், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ்குமார் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com