பாகிஸ்தான் உருவானபோது, அகதியாக இந்தியா வந்தவர்தான் ரஜினி பெக்டர். அவர் இன்றைக்கு 8,300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத் தலைவியாக உயர்ந்துள்ளார். அவரது வெற்றிக் கதையானது தொழில் முனைவோர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது.
கராச்சியில் 1940-இல் பிறந்தவர் ரஜினி பெக்டர் என்றாலும், வளர்ந்தது லாகூர் நகரில்தான். 1947-இல் பாகிஸ்தான் உருவானபோது, அவருடைய குடும்பத்தினர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்துக்கு உள்பட்ட பதான்கோட் பகுதிக்கு வந்தடைந்தனர். ஒரு மரத்தடியில் ஏழு நாள்களாக ரஜினி குடும்பம் ரயிலுக்காக காத்திரு ந்து வந்தத் துயரமும் நேர்ந்தது. அகதிகளாக வந்தவர்களை அங்குள்ள மக்கள் உணவு கொடுத்து காப்பாற்றினர்.
ரஜினிக்கு 17-ஆவது வயதில் திருமணம் நடந்தது. கணவரின் ஆதரவு, உதவி, ஊக்கம் துணையாக நிற்க 1978-இல் ஐஸ்கிரீம் பார்லரை ரஜினி தொடங்கினார். இவருடைய கண்டுபிடிப்பான 'கிரீமிகா' ஐஸ் கிரீம் சுவை நுகர்வோர்களை வெகுவாகக் கவர்ந்து, பிரபலமானது. தொடர்ந்து 'பிரெட்' , 'பிஸ்கட்' தயாரிப்பிலும் ஈடுபட்டார்.
விற்பனை அதிகரிக்கவே மகனுடன் இணைந்து பெரிய வணிக வளாகத்தைத் தொடங்கினார். 'மெக் டொனால்ட்ஸ்', 'குயிக்கர் ஓட்ஸ்' நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டார். வெளிநாட்டு நிறுவனங்கள் 'கிரீமிகா' நிறுவனந்த்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டின. ஆலமரமாகப் பெருகி விரிந்த 'கிரீமிகா' 2020-இல் பங்கு சந்தையில் பட்டியலிட்டது. இந்த நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 8,300 கோடி ரூபாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.