நடக்கும்போது ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துவிட்டு செல்போனில் பேசிக் கொண்டு நடக்க வேண்டாம். முடிந்தவரை செல்போனை வீட்டில் வைத்துவிட்டு நடப்பது நல்லது. தலையை உயர்த்தி, வயிற்றின் தசைகளை மென்மையாக உள்ளிழுத்து கைவீசி நடப்பது நல்லது.
சரியான நடைபயிற்சியில் வியர்ப்பது நல்லது. எனவே இறுக்கமான, பாலியஸ்டர் ஆடைகளைத் தவிர்க்கவும். உடல் சோர்ந்துப் போகாமல் வியர்வையை உறிஞ்சும் வகையில் ஏதுவான காட்டன் ஆடைகளை அணிவது நல்லது.
நடைபயிற்சி தொடங்கிய முதல் ஐந்து நிமிடங்கள் உடலுக்கு உற்சாகம். 10 முதல் 20 நிமிடங்களில் உடல் வெப்பமடைதல், தோலுடன் சேர்ந்துள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து வெப்பம் வெளியேறி வியர்க்கத் தொடங்கும். சக்தியளிக்கும் ஹார்மோன்களின் சுரப்பு, சுவாசம் அதிகரிப்பு நடைபெறும்.
சுமார் 30 முதல் 45 நிமிடங்களில் உடல் லேசாகி கொழுப்புச் சத்து எரிந்து இன்சுலின் சுரப்பு சீராகும்.
ஒருமணி நேரத்தில் நமது நடையின் வேகத்தைக் குறைக்க, இதயத் துடிப்புச் சீராகி வியர்வை அடங்கிய பின்னரும் ஒருமணி நேரம் கலோரிகள் செலவாகும் என்பது மருத்துவ ரீதியான உண்மை,
அதிக பருமன் உடையவர்கள், இதயம் பலவீனம் உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்னை உடையவர்கள், எலும்பு- மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டோர் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று நடைபயிற்சியை மேற்கொள்வதே சிறந்தது.
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.