மீண்டும் விடா முயற்சி

மீண்டும் விடா முயற்சி

அஜித் நடிக்கும் 'விடா முயற்சி' படம் அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது
Published on

இந்தாண்டில் அஜித் "விடா முயற்சி', "குட் பேட் அக்லி' என இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் "விடா முயற்சி'யை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் எனப் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் 50 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது என்றும், மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 35 நாள்களாவது தேவைப்படும் என்றும் பேச்சு இருக்கிறது.

இந்தப் படத்தை தயாரித்து வரும் நிறுவனம் "விடா முயற்சி' தவிர ரஜினியின் "லால் சலாம்', "இந்தியன் 2', "வேட்டையன்' மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் "எம்புரான்' ஆகிய படங்களை தயாரித்து வந்தது. லால் சலாம் ரிலீஸாகி விட்டது. கமலின் "இந்தியன் 2' படப்பிடிப்பும் முடிந்து இப்போது ரிலீஸýக்கும் ரெடியாகிவிட்டது.

இந்நிலையில்தான் ஒரே சமயத்தில் ஒரு படத்தில் மட்டும் கவனம் எடுத்து தயாரிக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. இதனால் ரஜினியின் "வேட்டையன்' படப்பிடிப்பில் மட்டும் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் அஜித், தனது கால்ஷீட்களை வீணடிக்க விரும்பாமல் அடுத்த படமான "கு.பே.அ'க்கு தன் கால்ஷீட்களை கொடுத்தார்.

இந்நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் "விடா முயற்சி'யை மீண்டும் அஜர்பைஜானிலேயே தொடர்கின்றனர். இந்த மாத இறுதியிலோ அல்லது அதற்கு முன்னரோ "விடா முயற்சி' குழு அஜர்பைஜான் கிளம்புகிறது. தொடர்ந்து சில வாரங்கள் அங்கே ஷூட்டிங் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து புனேவிலும் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. தீபாவளி ரிலீஸýக்கு டார்க்கெட் வைக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com