"விவசாயத்துக்குப் பயன்படும் வகையில் சூரிய ஆற்றலால் இயங்கும் தெளிப்பான் ட்ரோன்கள் எதிர்காலத்தில் பெருமளவில் பயன்பாட்டுக்கு வரும்' என்கிறார் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் நிலையான ஆற்றல், மேலாண்மைத் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி ஏ.மு.மதுரா.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"இன்றைய உலகில் நிலைத்தன்மை என்பது இன்றியமையாததது. பாரம்பரிய நடைமுறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் வகையி, புதுமையான கண்டுபிடிப்புகள் நாள்தோறும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறியப்படுகின்றன.
இந்த வகையில், ஒரு அற்புதமான கண்டுபிடிப்பே சூரிய ஆற்றலால் இயங்கும் ட்ரோன்கள். சூரிய சக்தி, மேம்பட்ட தொழில்நுட்பத்தின் சக்தியை இணைத்து இந்த ட்ரோன்கள் விவசாய நிலப்பரப்பை அதிகரிக்கும் வகையிலும், மாற்றும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.
சூரிய சக்தியில் இயங்கும் தெளிப்பான்கள், ட்ரோன்கள் எளிமையான, தனித்துவமான முறையில் இயங்குகின்றன. சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட இந்தக் கருவியானது சூரிய ஒளியை உள்வாங்கி, அதை மின்ஆற்றலாக மாற்றுகிறது. இதன்வாயிலாக, ட்ரோனின் மோட்டார்கள், புரபெல்லர்களை இயங்குகின்றன. இதனால் அவை பறக்கவும், தெளிப்பான்களின் செயல்பாடுகளைச் செயல்படுத்தவும் அனுமதிக்கின்றன.
சூரிய ஆற்றலால் தெளிப்பான் ட்ரோன்கள் இயங்குவதால், கார்பன் உழிழ்வையும், காற்று மாசுபாட்டையும் தடுக்கின்றன. அதுமட்டுமின்றி, விவசாயிகளுக்கு டீசல், பெட்ரோல் முதலீட்டையும் அவர்களது பணிச்சுமையையும் இந்தச் சூரிய ஒளி தெளிப்பான் ட்ரோன்கள் குறைக்கின்றன. இதனால் அவை விவசாயிகளின் நண்பனாகவே திகழ்கின்றன.
விவசாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், புதுப்பிப்பதற்கும் இதுமாதிரியான செயல்பாடுகள் நடைமுறைக்கு வருவதால், விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் பொறுப்புணர்வைத் தூண்டுகின்றன. ஆகையால், சூரியஒளி தெளிப்பான்கள் பசுமையான எதிர்காலத்துக்கு வழிவகை செய்யும். எதிர்காலத்தில் நல்லதொரு விவசாயம் அமையவும் இவை உதவி புரியும்'' என்கிறார் மதுரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.