நாட்டில் உள்ள மொத்த இருப்புப் பாதைகளின் மொத்த நீளமான 67,956 கி.மீட்டரில் தினமும் 14,444 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவை செல்லும் வழிகளில் உள்ள நிலையங்களில் அந்த மாநில, நகரத்தின் பிரபலமான உணவுகளை விற்கும் கடைகள் இருக்கும். அவற்றில் உணவின் சுவை நாக்கை ருசிக்க வைக்கும்.
நீண்ட தூர பயணிகள் பல மாநிலங்கள் வழியாகச் செல்வதால் அந்தந்த மாநில உணவுகளைச் சாப்பிட்ட திருப்தியும் ஏற்படும். வட கிழக்கு மாநிலங்களில் அதிக சுவையுடைய உணவுகள் இருக்கும். குஜராத்தில் இனிப்பு அதிகம். கடலோரப் பகுதிகளில் கடல் சார்ந்த அசைவ உணவுகள் கிடைக்கும்.
பிரபல ரயில் நிலையங்களில் கிடைக்கும் ஸ்பெஷல் உணவுகள் என்னென்ன?
புதுடெல்லி மெயின் ரயில் நிலையம்:
'ஆலு சாட்' என்பது சுவைக்காகவும், வாசனைக்காகவும் பிரபலம். இது ஒரு உருளைக்கிழங்கு சிற்றுண்டி என்பதோடு, மசாலா, எலுமிச்சை சாறு என பலவற்றுடன் கூடிய வறுத்த உருளைக்கிழங்கு.
சோலே குல்ச்சா, சோலே பதுரா, பனீர் பகோடா,சமோசா,கேசர் பால், லஸ்ஸி ஆகியவையும் இங்கு மிகவும் பிரபலம்.
ஹெளரா-கொல்கத்தா ரயில் நிலையம்:
'சந்தேஷ்' என்பது பெங்காலி' மக்களின் பாரம்பரிய உணவு. மற்றொன்று கத்தி ரோல். கத்தி ரோல் என்பது மென்மையான பரோட்டாவில் சிக்கன் அல்லது முட்டை, காய்கறிகள், பலவித சாஸ் கலந்து செய்யப்படுவதாகும்.
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்:
வடா பாவ். பன்னுக்குள் உருளைக்கிழங்கு போண்டாவுடன் பொறித்த பச்சை மிளகாய் வைத்து செய்யப்படுவதாகும்.
வாரணாசி சந்திப்பு:
கிளாசிக் பூரிஆலு, பட்டர் சுகர் டோஸ்ட்,பணாரசி பானி பூரி, கச்சோரி.
பெங்களுரு சந்திப்பு:
நெய், சர்க்கரை, உலர்ந்த பழங்களாலான மைசூரு பாக் இங்கு பிரபலம். பிசி பேலாபாத், ரவா இட்லி, கேசரி பாத் போன்றவையும் இங்கு பிரசித்தி பெற்றவை.
ஹைதராபாத் டெக்கான்:
ஹைதராபாத் பிரியாணி, இரானி சாய், உஸ்மானியா பிஸ்கெட்ஸ் , டபுள்கி மீத்தா.
கொச்சி சந்திப்பு:
ஆப்பம், தேங்காயினால் செய்யப்பட்ட மசாலா, நேந்திரங்காய் சிப்ஸ்.
எர்ணாகுளம் சந்திப்பு:
பழம் பொரி என்ற நேந்திரம் பழத்தில் செய்யப்பட்ட பஜ்ஜி.
கோழிக்கோடு:
கோழிக்கோடு அல்வா. இந்த அல்வா தேங்காய் எண்ணெய், வெல்லம், உலர் பழங்கள் கலந்து தயாரிக்கப்படுவதாகும்.
திருவனந்நபுரம்:
அப்பம், தேங்காய் பால் ஸ்டியூ, புளித்த அரிசி, தேங்காய் துறுவல்.
விஜய வாடா:
பருப்பு வடை
குண்டக்கல்:
வெண்பொங்கல், ஊத்தப்பம்.
ஆஜ்மீர்:
பியாஸ் (வெங்காயம்) கச்சோரி, சமோசா.
ஜாம்ஷெட்பூர்:
நாட்டிலேயே மிகச் சிறந்த சிற்றுண்டி சாலை இங்கு தான் என்பர். பல சுவையான மசாலா பொருள்களைச்சேர்த்து தயாரிக்கப்பட்ட ஹோம் ஸ்டைல் உணவில் மீன்களைக் காணலாம். அரிசி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி சாலட்டுகளுடன் பரிமாறி சாப்பிட்டால் சூப்பர்.
புணே சந்திப்பு:
மிசல் பாவ் என்ற முளைத்த பருப்புடன் செய்யப்பட்ட ஒரு காரமான கறியானது ரொட்டியுடன் தரப்படுகிறது. ஒரு கிளாஸ் மோர் கூடுதலாக உண்டு.
சுரேந்திரா நகர்:
ஒட்டகப்பாலில் தயாரிக்கப்பட்ட தேநீர்.
அமிர்தசரஸ் சந்திப்பு:
க்ரீம், உலர் பழங்கள் கலந்த லஸ்ஸி. பாரம்பரியமான குல்ச்சா அல்லது பரோட்டா, ரொட்டியுடன் லஸ்ஸி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.