ரயில் சேவை இல்லாத 7 நாடுகள்

உலகில் பல நாடுகளில் பாலைவனங்கள், நிலத்தில் ஏற்ற இறக்கங்கள், எரிமலைகள், பூகம்ப பகுதிகள்... உள்ளிட்ட பல காரணங்களால் ரயில் சேவை இல்லாத நிலை.
ரயில் சேவை இல்லாத 7 நாடுகள்
Published on
Updated on
2 min read

உலகில் பல நாடுகளில் பாலைவனங்கள், நிலத்தில் ஏற்ற இறக்கங்கள், எரிமலைகள், பூகம்ப பகுதிகள்... உள்ளிட்ட பல காரணங்களால் ரயில் சேவை இல்லாத நிலை. அவ்வாறு ரயில் சேவை இல்லாத 7 நாடுகள்:

ஐஸ்லாந்து: வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு தீவு நாடு. வடக்கு அட்லாண்டிக்கிலும் இதற்கு தீவுகள் உண்டு. மொத்த அளவு 300 மைல் நீளமும், 200 மைல் அகலமும் கொண்டுள்ள எரிமலை பீட பூமி. இவற்றில் பல உயிர்ப்பாய் உள்ளன. நில நடுக்கம் சகஜம். இதனால் மக்கள் கடற்கரைகளை ஒட்டியே வாழ்கின்றனர். ரயில் பாதை கிடையாது. மாறாக, குதிரைப் பயணம் அதிகம்.

அன்டோரா: பிரான்ஸ்க்கும் ஸ்பெயினுக்கும் இடையில் பைரனிஸ் மலையில் உள்ளது. அன்டோரா-லாபெல்லா நகரங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து உண்டு.ஆனால் ரயில் பாதை இல்லை.

பூடான்: தெற்காசியாவில் இமயமலை சாரலின் கிழக்கு எல்லையில் உள்ள நாடு. 1962-க்கு பின்னரே விஸ்தாரமான வெளி உலக தொடர்பு ஏற்பட்டது. சிலி

குரியிலிருந்து பஸ் சேவை உண்டு. தற்போது இந்தியா உதவியுடன் பல சாலைகள் போடப்பட்டுள்ளன. இப்போதுதான் ரயில் பாதை போடுவதற்கான திட்டம் துவங்கியுள்ளது.

குவைத்: தற்போது குவைத்-ஓமன் இடையே 1200 மைல் வளைகுடா ரயில் பாதை திட்டம் துவக்கப்பட்டு வேலை நடக்கிறது.

மாலத்தீவுகள்: ஆயிரம் தீவுகளுக்கு மேல் கொண்டது. படகுகள், வேகப் படகுகள் மற்றும் உள்நாட்டு விமானச் சேவைகளை நம்பியுள்ளது.

லிபியா: வட ஆப்பிரிக்காவில் எகிப்து, துனிஷியா நாடுகளுக்கு இடையே உள்ள பாலைவன நாடு. இதனால் இங்கு ரயில் பாதை சாத்தியமில்லை.

ஏமன்: தெற்காசியாவில் உள்ள குடியரசு நாடு. பாறை எண்ணெய் எடுத்தபோது, வளமான நாடாக இருந்தது. இன்று அந்த எண்ணைய் அருகிவிட்டதால், வறுமை நாடாகிவிட்டது. இங்கும் ரயில் பாதை கிடையாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com