வீட்டுமனை வாங்கப் போறீங்களா?

'வீட்டு மனைகள் வாங்குவோர் குறைவான காலத்துக்குள்ளே நிலத்தின் மதிப்பு உயருமா? என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
வீட்டுமனை வாங்கப் போறீங்களா?
Published on
Updated on
1 min read

'வீட்டு மனைகள் வாங்குவோர் குறைவான காலத்துக்குள்ளே நிலத்தின் மதிப்பு உயருமா? என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

அந்த இடத்தில் புதியதாக வசதிகள் என்னென்ன அடுத்த சில ஆண்டுகளில் வரும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்'' என்கிறார் வி.ஜி.என். ரியல் எஸ்டேட் நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வி.என்.தேவதாஸ்.

அவரிடம் பேசியபோது:

'கனவுகள் மீது தீராத வேட்கை, உழைப்பின் மீது மாறாதப் பற்று கொண்டவர்களால்தான் காலம் கடந்தும் தமக்கான இருப்பைத் தக்க வைக்க முடியும். அப்படியாக, சென்னையில் 1942-இல் குருசாமி, 'வி.ஜி.என்.' என்ற பெயரில் சிறிய செங்கல் சூளையாகத் தொடங்கினார்.

அந்தக் காலத்தில் கட்டுமானத்துக்கு செங்கல்களைப் பெருமளவு மக்கள் பயன்படுத்தினர். நம்பிக்கையோடு வாங்கிப் பயன்படுத்தும் நிறுவனமாகப் பெயரெடுத்து, வாடிக்கையாளர்களின் நன்மதிப்போடு உருவெடுத்தது.

பின்னர், ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்தது. வாடிக்கையாளர்களின் நன்மதிப்போடு, 83 ஆண்டுகள் தொடர்ந்து இன்று நான்காவது தலைமுறையாகத் தொடர்கிறது. குருசாமிக்குப் பின்னர், நான் தலைவராகப் பொறுப்பேற்றேன். அனுஷா அஷ்யந்த் தலைமை நிர்வாக அலுவலராக இருக்கிறார்.

இதுவரையில் 240-க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களை முடித்து, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பயன்களை அளித்துள்ளோம். 800-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை மனைப்பிரிவுகளாகவும், 20 மில்லியன் சதுர அடியில் வீடுகளாகவும் அளித்துள்ளோம்.

ஒவ்வொரு திட்டம் தொடங்கும்போதும், அடுத்த 20 ஆண்டுகள் வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு திட்டமிட்டே தொடங்குகிறோம். இதனால் ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ், கிரெட்ய், பி.ஏ.ஐ., டி.என்.பி.பி.ஏ. உள்ளிட்ட அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் நிறுவனமாக உருப்பெற்றுள்ளோம்.

குறைவான காலத்துக்குள்ளே நிலத்தின் மதிப்பு உயருமா? என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த இடத்தில் புதியதாக வசதிகள் என்னென்ன அடுத்த சில ஆண்டு

களில் வரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இடம் வாங்கி வீடு கட்டும்போது, போக்குவரத்து, பொழுதுபோக்கு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருக்கிறதா? என்பதைக் கவனிக்க வேண்டும். இவற்றை முன்னிறுத்தி, மனைப்பிரிவுகளை நாங்கள் மேற்கொள்வதால் சாதிக்க முடிகிறது.

எந்தச் செயல் தொடங்குவதற்கு முன்னாலும், தைரியத்தோடு தொடங்க வேண்டும். இதற்காக நிறுவனத்தின் பணியாளர்களோடு தோள் கொடுத்து இணைந்து, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றால் சாதிக்க முடியும்.

அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என்பதே நடுத்தர மக்களின் ஆசை. அதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம்'' என்கிறார் தேவதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com