இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அத்திரைப்படத்தின் பெயர் 'ரெட்ட தல' என்ற தகவலெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகியிருந்தன. ஆனால் அது அப்போது நடக்கவில்லை.
தற்போது அருண் விஜய்யின் 36-ஆவது திரைப்படத்திற்கு அந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்கள். இப்படத்தை 'மான் கராத்தே' திரைப்படத்தின் இயக்குநர் கிறிஸ் திருக்குமரன் எழுதி, இயக்குகிறார். இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் அருண் விஜய்யுடன் நடிகை சித்தி இத்னானி, தான்யா ரவிசந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் சாம் சி.எஸ். எழுதி இசையமைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் பேசிய அருண் விஜய், ''இந்தத் திரைப்படத்தின் கதை எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நான் எப்போதும் ஒரு பார்வையாளனாக இருந்துதான் கதை கேட்பேன். அந்த நேரத்தில் ஒரு பார்வையாளனாக என்னை அந்தக் கதை ஆச்சரியப்படுத்தினால் அந்தப் படத்தில் சிரத்தை எடுத்து நடிப்பேன். அப்படித்தான் இந்தப் படத்துக்குள்ளும் வந்தேன். 'தடம்' படத்துக்குப் பிறகு இதில் எனக்கு இரட்டை வேடங்கள்.
இந்தப் படத்துக்கான தலைப்பைப் பற்றிப் பேசும்போது 'ரெட்ட தல'ங்கிற டைட்டில் சொன்னார். இயக்குநர் அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் வித்தியாசமான முறையில எழுதியிருந்தார். இந்தக் கதைக்கு அந்த டைட்டில்தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தோம். தீபாவளிக்கு படத்தைக் கொண்டு வர முயற்சி செய்கிறோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.