தமிழில் கனடா தயாரிப்பாளர்

தமிழில் கனடா தயாரிப்பாளர்

கனடா நாட்டின் டொராண்டோ மாநகரில் வானொலியில் புகழ் பெற்ற தமிழராகத் திகழும் ஆர். ஜே. சாய் இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கிறார்.
Published on

கனடா நாட்டின் டொராண்டோ மாநகரில் வானொலியில் புகழ் பெற்ற தமிழராகத் திகழும் ஆர். ஜே. சாய் இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கிறார். விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் 'பிரெய்ன்' மற்றும் நவீன் குமார் எழுதி, இயக்கும் 'ஷாம் தூம்' ஆகிய இரண்டு படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநராகவும் திரை எழுத்தாளராகவும் முத்திரை பதிப்பதை லட்சியமாகக் கொண்ட ஆர். ஜே. சாய், முதற்கட்டமாக இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதையடுத்து தமிழ் திரையுலகில் தொடர்ந்து பயணிக்கவுள்ளார்.

ஆர். ஜே. சாய் இண்டர்நேஷனல் என்ற பேனரில் இப்படங்கள் உருவாகவுள்ளது.

'பிரெய்ன்' திரைப்படத்தை 'தாதா 87', 'பவுடர்', மற்றும் 'ஹரா' படங்களை இயக்கி கவனம் ஈர்த்த விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார். 'ஷாம் தூம்' படத்தை நவீன் குமார் இயக்குகிறார். இப் படத்தின் கதை, திரைக்கதையை ஆர். ஜே. சாய் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய ஆர். ஜே. சாய், ''கனடாவில் வாழ்ந்து வந்த போதிலும் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும். எனவே, 'பிரெய்ன்' மற்றும் 'ஷாம் தூம்' படங்கள் வாயிலாக எனது பயணத்தை தொடங்குகிறேன்.

உலகத் தரத்தில் இப்படங்கள் உருவாகவுள்ளன. கதையம்சம் மிக்க படங்களையும், திறமை கொண்ட இளைஞர்களையும் ஆர். ஜே. சாய் இண்டர்நேஷனல் தொடர்ந்து ஊக்குவிக்கும். இந்த இரு படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும். 2026 - பிப்ரவரியில் படங்கள் திரைக்கு வரும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com