சுற்றுதே... சுற்றுதே..!

வானில், நம் தலைக்கு மேலே சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள் எத்தனை தெரியுமா? 2025 மார்ச் மாதத்தின் கணக்கின்படி 14,904 செயற்கைக்கோள்கள் விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
சுற்றுதே... சுற்றுதே..!
Published on
Updated on
1 min read

வானில், நம் தலைக்கு மேலே சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள் எத்தனை தெரியுமா? 2025 மார்ச் மாதத்தின் கணக்கின்படி 14,904 செயற்கைக்கோள்கள் விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

இவையெல்லாம் 'எர்த் ஆர்பிட்' எனப்படும் பூமியின் சுற்றுப்பாதையில் சுழலவில்லை. சில சந்திரனுக்கும், சூரியனுக்கும், எரிநட்சத்திரங்களுக்கும், இதர கிரகங்களுக்கும் இடையில் சென்று கொண்டிருக்கின்றன. விண்வெளிக்கு மொத்தமாக இதுவரை 20,985 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.

செயற்கைக்கோள்கள் குறித்த ருசிகரத் தகவல்கள்:

'டெலி கம்யூனிகேஷன்' எனப்படும் தகவல் தொடர்பு, பூமியை இடைவிடாமல் கண்காணித்தல், தொழில்நுட்ப மேம்பாடு, பூமியில் ஆங்காங்குள்ள இடங்களுக்கு வழிகாட்டல், பாதையைக் காட்டி வழி நடத்திச் செல்லுதல், தொழில்நுட்பங்களை டெமோ செய்தல், விண்வெளி அறிவியல் ஆய்வு உள்ளிட்டவற்றுக்காக இவை செலுத்தப்படுகின்றன. இவற்றில் 63 சதவீதம் தகவல் தொடர்புக்காக அனுப்பப்பட்டவையே.

 விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் பல செயலற்று விட்டன. சில பூமிக்கு குறிப்பிட்ட காலக் கெடுவில் திரும்பி வருகின்றன. ஏவப்படுபவை அனைத்தும் முழு செயல்பாட்டில் உள்ளவை என்று சொல்ல முடியாது.

 அதிக அளவில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவது 'ஸ்பேஸ் எக்ஸ்' என்ற நிறுவனம் தான்.

கடந்த 63 மாதங்களில் 56.95 சதவீதம் செயற்கைக்கோள்கள் (அதாவது 11,951) விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

ஸ்புட்னிக் விண்ணில் ஏவப்படும் போது அதன் எடை 183. 9 பவுண்டாக இருந்தது. தொழில்நுட்பம் மேம்பட்டதால், தற்போது 100 மி.மீ. அதாவது நான்கு அங்குல அளவில் கூட 'க்யூப்சாட்' எனப்படும் செயற்கைக்கோள்கள் உருவாக்கப்படுகின்றன. எடையோ வெறும் 4.4 பவுண்டுகள்தான்!

'கியூப்சாட்' செயற்கைக்கோள் தயாரிக்க ஆகும் செலவும் 50 ஆயிரம் டாலரிலிருந்து 1.50 லட்சம் டாலர் வரை ஆகிறது.

விண்வெளியில் ஏற்படக் கூடிய குப்பைகள் என்னென்ன சேதத்தை விளைவிக்கக் கூடும் என்று 'யுனைடெட் நேஷன்ஸ் ஆபீஸ் ஃபார் அவுட்டர் ஸ்பேஸ் அஃபேர்ஸ்' எனப்படும் ஐக்கிய நாடுகளின் விண்வெளி விவகாரங்களுக்கான அலுவலகம் 1978-இல் கண்டறிந்தது.

ஆராய்ச்சி நிபுணரான டான் கெஸ்லர் என்பவர், 'ஒன்று இன்னொன்றுடன் மோதி ஏராளமான அளவில் குப்பைகள் சேரும். இது பூமிக்கே அபாயம். இதற்கு கெஸ்லர் சிண்ட்ரோம் என்று பெயர்' என்றார். இந்த நிலை விரைவில் வருமோ? என்று விஞ்ஞானிகள் அச்சப்படுகின்றனர். தலைக்கு மேலே அபாயம் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com