'செம'

தமிழ்நாட்டின் சமுத்திரப்பட்டியைச் சேர்ந்த சின்னழகு அம்பலம் - காந்தம்மாளின் மகன் விஜயகுமார், அமெரிக்காவில் சிறந்த செஃப்புக்கான விருது பெற்றுள்ளார்.
'செம'
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டின் சமுத்திரப்பட்டியைச் சேர்ந்த சின்னழகு அம்பலம் - காந்தம்மாளின் மகன் விஜயகுமார், அமெரிக்காவில் சிறந்த செஃப்புக்கான விருது பெற்றுள்ளார்.

இவர் மருத்துவம், பொறியியல் படிக்க வசதி இல்லாததால், கேட்டரிங் கல்லூரியில் சேர்ந்து படித்தவர். வாழ்க்கைப் பயணம் இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது.

அங்கு நியூயார்க்கில் 'செம' என்ற பெயரில் ஒரு தமிழ்நாடு பாரம்பரிய உணவகத்தை திறந்தார். நியூயார்க் டைம்ஸின் நூறு சிறந்த உணவகங்களில் ஒன்றாக இந்த உணவகம் இடம்பிடித்து விட்டது. அதோடு, மிச்சிலன் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே இந்திய உணவகமும் கூட!

இதனால், இவருக்கு கெளரவமிக்க 'ஜேம்ஸ் பியர்ட்' விருதானது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க உணவு உலகின் மிக உயர்ந்த விருது இதுவேயாகும்.

இதுகுறித்து விஜயகுமார் கூறியது:

'தமிழரான நான் இப்படி ஒரு சிறந்த நிலைக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. நான் சமைக்கும் உணவு அக்கறையுடனும், ஆன்மாவுடனும் தயாரிக்கப்படுகிறது. உணவுக்கு ஏழை பணக்காரன் கிடையாது. என்கிறார் விஜயகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com