செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சிறை'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார்.
கதையில் களத்தையும் கதாபாத்திரங்களையும் பிரதிபலிக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்குகிறார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன் அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகிறார்.
சமீபத்தில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியின் விடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. நடிகை ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விடியோவின் படி, நட்சத்திர தம்பதி வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்ட
தாகத் தெரிகிறது. அதில் ஷாலினியின் தலையில் அஜித் குங்குமம் வைத்து விட்ட பிறகு, ஷாலினி அஜித்தின் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். தயங்கி நின்ற அஜித் 'போதும் போதும்' என்று சொன்னாலும், மீண்டும் விழுந்து வணங்கினார் ஷாலினி. உடனே அஜித், 'வீட்டுக்கு போய் நான் விழணும்' என ஜோக்கடிக்க... சிரிப்பலைகள் எழுந்தன. அஜித் ரசிகர்கள் இந்த விடியோவை பெருமளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இன்றைக்கு தமிழ் சினிமா இருக்கும் நிலையில், ஒரு படத்தை தயாரிப்பதே பெரிய சாதனையாக இருக்கிறது என்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள். அந்தப் படத்தை எந்த சிக்கலும் இல்லாமல் ரிலீஸ் செய்வது அதைவிட அசுர சாதனை. திரைப்பட உலகின் பாரம்பரிய ஏவி.எம்., விஜயா வாகினி நிறுவனங்களே சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டது.
இந்த சூழ்நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் சினிமா உலகில் நிலைத்து நீடித்து நிற்கிறது சூப்பர் குட் பிலிம்ஸ். அதோடு நிற்காமல் விரைவில் 100 - ஆவது படத்தை தயாரித்து அசத்தப் போகிறது சூப்பர் குட் பிலிம்ஸ்.
திரைப்பட உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் இந்த நிறுவனத்தை 1990 - ஆம் ஆண்டு துவங்கினார், பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி. முதன் முதலில் வெளியான திரைப்படம் 'புது வசந்தம்'.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தேவாவின் சகோதரரும், பாடகருமான சபேஷிடம், 'தேவா சார் 400 படத்திற்கு மேல் இசையமைத்திருக்கிறார். அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு கூட விருது கிடைத்திருக்கிறது. ஆனால் தேவா சாருக்கு ஏன் தேசிய விருது
கிடைக்கவில்லை?' என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த சபேஷ், 'அவருக்கு விருது கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது. நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.
தேவாவிற்கு 'காதல் கோட்டை' படத்திற்கே தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். அண்ணன் வாங்கவில்லை என்றால் என்ன? அப்பாவிற்கு பதில் மகன் ஸ்ரீகாந்த் தேவா வாங்கி இருக்கிறார்.' எனப் பேசியுள்ளார் சபேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.