கவனம் ஈர்க்கும் தமிழர்...

கூகுள் குரோமை 3,010 கோடி ரூபாய் அளித்து வாங்க முன்வந்துள்ளார் "பெர்ப்ளெக்ஸிட்டி' செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரும் இணை நிறுவனருமான அரவிந்த் ஸ்ரீனிவாஸ்.
அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
Published on
Updated on
1 min read

இணையத் தேடலில் முதலிடத்தில் இருக்கும் "கூகுள் குரோமை' 34.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (3,010 கோடி ரூபாய்) அளித்து வாங்க முன்வந்துள்ளார் "பெர்ப்ளெக்ஸிட்டி' செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரும் இணை நிறுவனருமான அரவிந்த் ஸ்ரீனிவாஸ்.

சென்னையைச் சேர்ந்த முப்பத்தொரு வயதான இவர், கூகுளின் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்றான கூகுள் குரோம் மீது குறிவைத்துள்ளார்.

உலக அளவில் 300 கோடி பேர் 'குரோம்' தேடல் உலாவியைப் பயன்படுத்துவதால், அதிக அளவில் கூகுளுக்கு வருமானம். இது கூகுளின் தேடல், விளம்பரச் சேவைகளுக்கான ஒரு முக்கியமான நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.

ஐஐடி சென்னையில் இளநிலைப் படிப்பை முடித்திருந்த அரவிந்த், பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்தார்.

தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மீது அரவிந்துக்கு ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் யோசுவா பெங்கியோவுடன் பணிபுரிந்தார். பின்னர், கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்ததும் "தேடல் தொழில்நுட்பங்கள், இணைய சுற்றுச்சூழல் அமைப்புகள்' பற்றிய ஆழமான நுண்ணறிவை அவருக்கு வழங்கின.

2022-இல் டெனிஸ் யாரட்ஸ், ஜானி ஹோ, ஆண்டி கோன்வின்ஸ்கி ஆகியோருடன் அரவிந்த் இணைந்து "பெர்ப்ளெக்ஸிட்டி ஏ.ஐ' நிறுவனத்தைத் தொடங்கினார்.

அமெரிக்காவில் கூகுள் மீது அதிகரித்து வரும் நீதிமன்ற சட்ட அழுத்தங்கள், குரோமை விற்க கூகுளை நிர்ப்பந்தப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விற்பனை அத்தனை சீக்கிரத்தில் நடக்காது என்றே சொல்லப்படுகிறது. கூகுளும் சட்டத் தீர்வுக்காக சட்ட ரீதியாகப் போராடும். கூகுள் வருவாய் மழை பொழியும் காமதேனுவாக இருக்கும் குரோமை அத்தனை சீக்கிரம் இழந்துவிட தயாராகாது.

அரவிந்த் குரோமை வாங்குகிறாரோ?, இல்லையோ? அவர் சொன்ன பெரும்தொகையானது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com