ரசிகர்களின் ரசனை

ஏ.எல். உதயாவின் நடிப்பில் வெளிவந்துள்ள "அக்யூஸ்ட்' படத்துக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.
ரசிகர்களின் ரசனை
Published on
Updated on
1 min read

ஏ.எல். உதயாவின் நடிப்பில் வெளிவந்துள்ள "அக்யூஸ்ட்' படத்துக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் ஒன்றிணைந்த விழா சென்னையில் நடந்தது. இதில், பங்கேற்ற ஏ.எல். உதயா பேசுகையில், ' பகிர்ந்து கொள்ள நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா? என தெரியாது.

அவ்வளவு சோர்வாக இருக்கிறேன். என்னுடைய நண்பர்களின் ஆதரவினால் இப்படத்தின் பணிகளைத் தொடங்கி, நிறைவு செய்து ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் சேர்ப்பித்து மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.

இதற்குள்ளாக நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே, விவரிக்க இயலாது, பகிர்ந்து கொள்ள முடியாது. இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக வேலை செய்தார்கள். சிலர் கூடவே இருந்து தடுத்தார்கள். அதெல்லாம் வலி மிகுந்த விஷயங்கள்.

சினிமாவில் நாங்கள் இன்று இந்த இடத்தில் நிற்கிறோம் என்றால் சாதாரணமானதல்ல. மிகப் பெரிய வெற்றி. இந்த இடம் அப்படி இருக்கிறது. ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன. யாருடைய ஆசிர்வாதம் என்று தெரியவில்லை, இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று திரையரங்கில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தை திரையரங்குகளில் ஓட வைப்பதற்காகப் போராடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்தப் போராட்டத்தை நானும் எனது குழுவும் இஷ்டப்பட்டுதான் செய்து வருகிறோம். இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு. எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது.

இருந்தாலும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். இந்தத் திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது என தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்தப் படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு ரசிகர்களின் ரசனைதான் காரணம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com