நீல வண்ண பந்து வடிவத்தில் உள்ள இந்த சின்ன நிலா மங்கலான நீல ஒளியை ஒளிருகிறது. யுரேனஸ் கிரகத்தை சுற்றி வரும் இந்தப் புதிய நிலாவை கண்களால் பார்க்க முடியாது.
வாயேஜர்-2 விண்கலம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஏவப்பட்டது. வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் கிரகங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வாயேஜர் 2 ஏவப்பட்டது. அந்த விண்கலத்தால் கூட இந்த புதிய நிலாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
'யுரேனஸ் கிரகத்திலிருந்து சுமார் 56 ஆயிரம் கி.மீ. தொலைவில், இந்தப் புதிய நிலா சுற்றி வருகிறது' என்று விஞ்ஞானிகள் நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டுபிடிப்பு மூலம், யுரேனஸ் கிரகத்தைச் சுற்றிவரும் நிலவுகள் எண்ணிக்கை 29 - ஆக உயர்ந்துள்ளது.
சூரியனிலிருந்து அதிக தூரம் விலகி இருக்கும் யுரேனஸ் கிரகத்தை ஜெர்மனிய வானியல் நிபுணரான வில்லியம் ஹெர்செல் கண்டுபிடித்தது 1784-இல்தான். யுரேனஸ் பூமியைவிட ஐந்து மடங்கு பருமன் கொண்டுள்ளது. யுரேனஸ் கிரகத்தில் அதிகமான குளிர் நிலவுகிறது.
'வாயேஜர் 2' விண்கலத்துக்குப் பிறகு 2021-இல் விண்ணில், உலகின் மிக சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஏவப்பட்டது. அந்தத் தொலைநோக்கிதான் புதிய நிலவைக் கண்டுபிடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்படாத இந்த நிலா சுமார் 10 கி.மீ. விட்டம் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.