சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட் க்ரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் 'பிராமிஸ்'. அருண்குமார் சேகரன் இப்படத்தை இயக்கி நடிக்கிறார். நதியா சோமு, சுஜன், அம்ரிஷ் , பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார், கலைவாணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது, 'பிராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம், உறுதி என்ற பல்வகையான பொருள். எழுத்து மூலமாக எழுதப்படும் ஆவணம் தெரியும். அது போன்ற மதிப்பு மிக்கது வாய்மொழியாகச் சொல்லப்படும் சத்தியம், அதாவது பிராமிஸ்.
அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும்போது முதலில் 'நான் சொல்வதெல்லாம் உண்மை' என்று சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லப்படும் பிராமிஸ் எனப்படும் அந்தச் சத்தியத்தின் பின்னே இருப்பது உண்மையும் நம்பிக்கையும் உறுதிப்பாடும்தான். இறுதியில் அதுதான் ஜெயிக்கும். அதனால்தான் நமது தேசிய சின்னத்தில் 'சத்தியமேவ ஜெயதே', அதாவது வாய்மையே வெல்லும் என்று எழுதப்பட்டுள்ளது.
உண்மையையே பேசிய அரிச்சந்திரனும், அவனைப் பின்பற்றிய காந்தியும் வரலாற்றில் சத்தியத்தின் சாட்சியங்களாக இருப்பதை அறியலாம். அப்படி அந்தச் சத்தியத்தை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காதலர்களுக்குள் இருக்கும் பிராமிஸ் என்பது மிகவும் மதிப்புள்ளது என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்.
ஒரு கட்டத்தில் அந்த பிராமிஸ் உடைக்கப்படும் போது, அந்த நம்பிக்கை சிதையும்போது வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா, இல்லையா? என்பதே இந்தப் படத்தின் கதை'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.